உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மறைமலையம் 22

அருமைக் கொழுநரான அடிகளை வணங்கி அன்பினால் நெஞ்சம் நெக்குருகி வருந்தாநிற்பத், திருவருள் இயக்கத்தால் அதனை உணரப்பெற்ற அடிகள், தம் ஐயன் திருவடிக்கட் பதிந்த தமதுணர்வு சிறிது அதனினின்றும் மீண்டு புறத்தே இவ்வுலகியல் நிகழ்ச்சிகளிற் செல்லப்பெற்றார்; பெற்றுத் தங் கற்புடை மனைவியார்க்கிரங்கி அவரைத் தேற்றி அவர்க்குச் சிவபெருமான் திருவருட் பாங்குகளை விரித்தோதா நின்றார். தமது பிரிவாற்றாமையால் வந்து வருந்திய தங் கற்புடை பொருட்டே, இறைவன்

மனைவியார்

றிருவருளால் உந்தப்பட்டு அடிகள் இவ் வுலகிய லுணர்வு மீளப்பெற்றார் என்பதற்கு,

66

“முடித்த வாறும் என்றனக்கே தக்க தேமுன்

அடியாரைப்

பிடித்த வாறுஞ் சோராமற் சோர னேன்இங்

கொருத்திவாய்

துடித்த வாறுந் துகிலிறையே சோர்ந்த வாறும்

முகங்குறுவேர்

பொடித்த வாறும் இவையுணர்ந்து கேடென் றனக்கே சூழ்ந்தேனே”5

என்று அவர் தாமே அருளிச் செய்தமையே சான்றாம். மாதரை நோக்கிக் கூறுவனவாக அடிகளால் அருளிச் செய்யப்பட்ட திருவெம்பாவை, திருவம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப்பொன்னூசல் என்னும் பத்துள் திருச்சாழல் ஒழிய ஏனைய வெல்லாந் தங் கற்புடை மனைவியாரும் அவர் தம் அன்புடைப் பாங்கிமாரும் தம் இறைவற்கு ஆட்படல் வேண்டி அவர்தம்மை நோக்கியே அருளிச் செய்யப்பட்டனவாகப் புலனாகின்றன; இவை பத்தின் ஈற்றிலுள்ள அன்னைப் பத்து அடிகள் தம் அருமைப் புதல்வியை நோக்கி அருளிச் செய்தாராகல் வேண்டுமெனவே பாலதாயிருக்கின்றது; ளஞ்சிறார் தம் அன்னையை நோக்கிக் கூறுவதாக அடிகள் அதனை அருளிச் செய்திருப்பதே அதற்குச் சான்றாமென்க. சிவபிரான் றன்அளப்பரிய அருட்பெருமைகளை அடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/97&oldid=1587543" இலிருந்து மீள்விக்கப்பட்டது