உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1✰

63

சென்ற பொருட்டிரளை யெல்லாஞ் சிவனடி யார்க்கும் சிவபிரான்றிருக்கோயிற் றிருப்பணிக்கும் செலவிட்டுத் தம்மை மறந்து சிவபிரான் திருவடிப் பேரன்பில் மூழ்கியிருந்த நிலையுங் கேள்வியுற்றும் மனங்கசியப் பெறானாய் 'எடுத்துச் சென்ற பொருளுக்குத் தக்க குதிரைகள் விலை கொண்டு உட உடனே வாரீரேல், நுமக்குப் பழுதுநேரும்' என அவன் கடிந்து அவர்க்கு ஒரு திருமுகம் எழுதி விடுத்தமையும், பரிகளெல்லாந் திரும்ப நரிகளாய ஞான்று நடுநிலை வழீஇ அடிகளைப் பெரிது வத்தினமையுமே சான்றாம். இ ஃதிங்ஙன மாகவும், “ஓடும் பல்நரி ஊளைகேட்டு அரனைப், பாடின என்று படாம்பல அளித்த” வரகுண பாண்டிய மன்னனே அடிகளை அமைச்சராய்க் கொண்டிருந்தவன் ஆவன் என்று ஒருவர் கூறியது நகையாடற் பாலதாமென்க. சிவபெருமா னிடத்தும் அவனடியாரிடத்துங் கரை கடந்த பேரன்புடையராய் விளங்கிய வரகுண பாண்டியரே அடிகளை அமைச் சராவுடையராயின் தமது அரசுரிமைச் சல்வமெல்லாம் அவர் தந் திருவடிக் கீழ்வைத்து அவர் வேண்டியவாறு கொடுத்திருப்பாரல்லது, சிவபெருமான் திருவடிப் பேரன்பிற் பிணிப்புண்ட அடிகளைச் சிறிதும் வருத்தி இரார். ஆகலான், அடிகளை அமைச்சராய் உடைய பாண்டிய மன்னன் வரகுணர் அல்லன் என்பது ஒருதலை; இன்னும் அவ்வரலாற்றினை, அடிகள் காலத்தை ஆராய்ந்து வரையறுக்கும் மூன்றாம் பகுதியில் நன்கு விளக்கிக் காட்டுதும்.

செலவிடக்

-

இனி, அடிகள் நனவே தமைப்பிடித்தாண்ட அரு ளாசிரியன் திருவடிப்பேரன்பாற் றமதுள்ளந் தேக்கப் பெற்றுத், தமக்குள்ள இவ்வுலகத் தொடர்புகளை முற்றும் மறந்தாராய் என்பெலாம் புரை புரை கனிய அன்புரை ததும்புந் திருவாசகத்திருப்பதிகங்கள் பல அருளிச்செய்தபடியாய்த் தாம் அருள்பெற்ற குருந்தமரத்தி னருகிருப்பா ராயினர். இவ்வாறு பல நாட்கள் கழிந்தன. அரசனுக்குரிய வினைமேற்கொண்டு குதிரைத்திரள் விலைகொள்ளச் சென்ற தங்காதலர் பல நாட்களாகியுந் திரும்பிவராமை கண்டு, திருவாதவூரடிகளின் கற்பிற் சிறந்த மனைவியார், அவரோடு உடன்சென்று மீண்டாரை வினாவி, அவர் சிவபிரான் திருவடித் தொண்டராகித் தமது முன்னைநிலை திரிபுற்றமை தெரிந்து, அவரைப் பிரிதல் ஆற்றாராய், உடனே திருப்பெருந் துறைக்குப் போந்து, தம்

வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/96&oldid=1587542" இலிருந்து மீள்விக்கப்பட்டது