உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

  • மறைமலையம் 22

பொருள்களை அவர் தம்மிற் சிலர் நல்வழியிற் பயன்படுத்தாது தமது சிற்றறிவால் தீயவழிகளிற் செலவு செய்து தமக்கும் பிறர்க்குங் கேடு சூழ்குவராயிற் பேரறிவும் பேராற்றலுமுடைய தந்தையாயினான் அதுகண்டு வருந்தி, அவர்க்குத் தான் றந்த அப்பொருளை அவர்பானின்றும பிரிப்பித்து வேறு நல்லார்க்கு நல்ல துறைகளிற் பயன்படுத்துவானல்லானோ? அதுபோலவே, தான் பாண்டிய மன்னனுக்குத் தந்த பொருளை அவன் தன் குதிரைப் படையைப் பெருக்கி வலிவாக்கி அதன்றுணையால் வேற்று வேந்தர்மேற் படையெடுத்துச் சென்று அவருடைய நாடு நகரங்களைக் கைக்கொள்ளல் வேண்டினானல்லது, அப்பொரு ளால் நாட்டை வளம் படுத்துக் குடிகளைக் கல்வியிலுஞ் செல்வத்திலும் அன்பிலும் வாழ்வித்தற்கு முயன்றான் அல்லன். அதனால், குதிரைத் திரள் கொள்ளுதற்கு அவன் தந்த பொருளை வேறு நல்ல துறைகளிற் பயன்படுத்துமாறு செய்தது இறைவற்குக் குற்றமாகாதென்க. நன்னெறியிற் பயன்படுத்தாத பிள்ளைகளின் பொருளை அவர்தந் தந்தை அவர்பானின்றும் வலிந்து பற்றியாதல் மறைவாய்ப் பற்றி யாதல் வேறு பயன்படு நெறிகளிற் செலவு செய்தலைக் குற்றமெனக் கூறுவார் இவ்வுலகத்தியாரும் இலர், திருவாதவூரடிகளை அமைச்சராய்க் கொண்டிருந்த பாண்டியமன்னன் போரில் மிகு விருப்புடையனாய், வேற்றாசர் நாடு கவரல் வேண்டியே தனது குதிரைப் படையைப் பெருக்கி வலிவாக்கக் கருதினானென்பது.

“பொற்பிலங்கு புதுப்பரி இங்குநங்

கொற்றம் ஓங்க விரைவிற் கொளப்படும்"

என்றும்,

"மண்ணின் நீள்மறு மண்டலங் கொள்பவர்க் கெண்ணி லங்கொர் இலக்கம் இவுளிகள் கண்ணு பந்தியிற் கட்டத்தகும்”

என்றுங் குதிரைத் துறைக்காவலர் கூறியதாக நம்பியார் திருவிளையாடல் கூறுமாற்றால் நன்கு பெறப்படும். மேலும், இவன் சிவபிரானிடத்துஞ் சிவனடியாரிடத்தும் அன்புடையன் அல்லன் என்பதற்குத், திருவாதவூரடிகள் இறைவனால் அடிமை கொள்ளப்பட்ட வியத்தகு நிகழ்ச்சியும், அவர் தாங் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/95&oldid=1587541" இலிருந்து மீள்விக்கப்பட்டது