உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

61

என்னுந் திருப்பாட்டிற் றாமே குறிப்பிடுதலானும் அவரது பின்னைநிலையைக் கூறுதற்கண் திருவாதவூரர் புராணவுரையே பொருத்தமுடைத்தாதல் தெளியப்படும். பிறர் பழிதூற்று முரையைக் கேட்குங்கால் வருந்துமுணர்வுங் கெடுதல் வேண்டுமென இப்பாட்டின்கண் அடிகள் வேண்டுதலும் நினைவுகூரற்பாற்று. எனவே, தஞ்செயல் இழந்து அருட்செயல் வழியராய் நின்று தம்பாலிருந்த பொருட்டிரளையெல்லாஞ் செலவு செய்தமையின், அஃது அடிகள்பாற் குற்றமாகாதென்று தெரிந்துணர்ந்து கொள்க.

6

அடிகள்பால் அது குற்றமாகாதாயினும், குரவனாய் வந்து அவரை அடிமைகொண்ட இறைவன் நடுநிலை வழிஇ அரசனுக்குரிய அப்பொருளைப் பலதுறைகளிற் செலவிட்டு அழிக்கும்படி ஏவியது அவனது இறைமைத் தன்மைக்கு இழுக்காகாதோவெனின்; எண்ணிறந்த வுலகங்களுக்கும், அவ்வுலகங்களிலுள்ள எல்லையில்லாப் பொருள்களுக்கும் எஞ்ஞான்றும் உண்மையில் உரியவன் முழுமுதற் கடவுள் ஒருவனேயாம்; இவ்வுகலங்களில் இடையிடையே வந்து போம் மக்களெல்லாரும் அவனருளால் அவற்றிற் சிறிது சிறிது பெற்றுச் சிலகாலம் அவற்றைக் கையாண்டு கழியும் நீரர் ஆவர். ஆகவே, இறைவன் அவர்க்கிரங்கித் தனது பெரும்பொருளில் ரு ரு சிறுகூற்றை அவர்க்குச் சிறிது காலத்திற்கு நல்கியது போலவே, மீட்டும் அவர்பானின்றும அதனைப் பிரிப் பித்துத், தன் மெய்யடியார் வேண்டும்போது அவர்க்குப் பயன்படுமாறு அதனை வழங்குதலுஞ் செய்வன். இங்ஙனமே ஒருகாற் பாண்டிய மன்னனுக்கு நல்கிய பெரும் பொருளில் ஒரு பகுதியைப் பிறிதொருகால் அடியவர்க்குப் பயன்படுமாறு அவனின்றும் பிரிப்பித்துச் செலவிடுவித்தது இறைவற்குக் குற்றமாதல் செல்லாது. அற்றன்று, பாண்டியனுக்கென்றே தந்த பொருளை அவன் வேண்டியவாறு செய்யவிடுதலே முறையாமல்லது, அவனது கருத்துக்கு மாறாக அவனை ஏமாற்றி அதனை வாங்கிச் செலவிடுவித்தல் முறை யாகாதாலெனின்; மக்கள் முதலான உயிர்கட்கும் வற்கும் உள்ள உறவு ஒரு தந்தைக்கும் அவன் புதல்வர்க்கும் உள்ள உறவு போல்வதாம். புதல்வர்க்குப் பகுத்துக்கொடுத்த

றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/94&oldid=1587540" இலிருந்து மீள்விக்கப்பட்டது