உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம்

22

எனவும்

மையலாம் உணர்வின் மிக்கீர் யாவர்நீர் மாயா பேதப் பொய்யெலாம் உரைத்தல் வேண்டா போமினி யகல வென்றார்’

"மீனவன் எழுது மோலை கேட்டபின் மின்பால் அன்பர் ஆனவர் அடியார் எம்மை யடிமையா உடைய ரல்லால்

தான்எனக் கண்ணல் என்றுந் தன்னையான் பிழைத்தே னென்றும் மாநில மன்னன் சொன்ன தென்னென மனத்தி லெண்ணி"

எனவும் போந்த செய்யுட்களால் நன்கு விளங்கா நிற்கும். தமது நிலை மாறிநின்ற அடிகள்திறம் அறியாது, அவர் அரசன்விடுத்த திருமுகங் காண்டலுந் தாஞ்செய்த பிழையினை நினைந்து உளங்கலங்கினாரெனக் கூறும் நம்பியார் திருவிளையாட லுரையும், பரஞ்சோதியார் திருவியைாடலுரையும் இவ்விடத் திற்குப் பொருத்தமில்லனவாய்க் காணப்படுகின்றன. அடிகள் இறைவனால் அடிமை கொள்ளப்பட்டபின் தந்நிலை திரியாது முன்னையுணர் முன்னையுணர்வொடு நின்றனராயின், தாம் மேற்கொண்டு வந்த அமைச்சியற் கடனை மறந்திரார். மற்று அவர் அவ்வாறின்றித் தமதுணர்வு முற்றும் மாறிச்

சிவவுணர்வினராய் நின்றமை,

“நவமாய செஞ்சுடல் நல்குதல் நாமொழிந்து

சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ'

”2

என்று தாமே தமது திருமொழியிற் கிளந்துகூறுதலானும், தாம் நின்ற அந்நிலையினுண்மை தெரியாமற் பிறர் தம்மை யிகழ்ந்துரைத்தமையினையும் “ஏசாநிற்பர் என்னையுனக் கடியானென்று பிறரெல்லாம் பேசாநிற்பர்”3 எனத் தாமே மொழிந்தருளுதலானும், தம்மை ‘உன்மத்தன்' என்றே காண்டு அஞ்ஞான்றுள்ளார் தத்தம் மனத்திற்குத் தோன்றிய வாறெல்லாந் தம்மை ஏசிப் பேசினமையும்,

'உத்தம னத்தன் உடையா னடியே நினைந்துருகி மத்த மனதொடு மால்இவன் என்ன மனநினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட ஊர்ஊர் திரிந்தெவருந் தத்த மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல் சாவதுவே

224

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/93&oldid=1587539" இலிருந்து மீள்விக்கப்பட்டது