உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

59

பழைய

அைைமச்சராய் நின்றநிலையில் அரசனது பொருளைத் தாம் வேண்டியவாறு செலவழித்தாரல்லர்; குருவடிவிற்போந்த இறைவனால் ஆட்கொள்ளப்பெற்றுத் தமது நிலைமாறி அவன்றன் திருவடித்தொண்டரானபின் தமது முன்னைநிலையை முற்றும் மறந்து அன்புவடிவினரானமையின், அஞ்ஞான்று தம்மையுந் தம்மோடு உடனிருந்தவைகளையும் தம்மையடிமைகொண்ட தலைவற்கு உரிமையாக்கிப் பின்னர் அத்தலைவன் ஏவியபடியே தம்பாலுள்ள பொருண்முழுதுஞ் செலவிட்டார். அன்புவடிவாய்த் திரிபுற்ற அடியவர் செயலும், பேய்பிடியுண்டோர் அருள் கொண்டார் இளஞ்சிறார் என்னும் இவர் செயலுந் தம்முள் ஒக்குமென்பது பேரன்பின் திறம் அறிந்தார்க்கெல்லாம் ஒப்ப முடிந்ததொன்றாம் இவ்வுண்மை, ஞாலமதின் ஞானநிட்டையுடையோ ருக்கு

66

நன்மையொடு தீமையில் நாடுவதொன் றில்லை சீலமிலை தவமில்லை விரதமொடாச் சிரமச்

செயலில்லை தியானமிலை சித்தமல மில்லை

கோலமிலை புலனில்லை கரண மில்லை குணமில்லை குறியில்லை குலமு மில்லை

பாலருடன் உன்மத்தர் பிசாசர்குண மருவிப் பாடலினோ டாடலிவை பயின்றிடினும் பயில்வர்’

என்னுஞ்

பட்ட

சிவஞானசித்தித் திருப்பாட்டில்

தெருட்டப்

மை காண்க. அடிகள் தம் ஆசிரியனைத் தலைப்பட்டு அவற்கு அடிதொழும் அன் பரானபின் தமது முன்னைநிலை முற்றும் மாறி அன்புருவானாரென்பது, திருவாதவூரர் புராணத்தில்,

‘அன்புடன் நேக்கி நிற்பர் அழுவர்கை தொழுவர் வீழ்வர் இன்புற வெழுவர் பின்பால் ஏகுவர் இரங்கி மீள்வர் நன்பகல் கங்குல் காணார் ஞானநல் வடிவே கண்டு கொன்புனை பித்தர் பாலர் பிசாசர்தங் கொள்கை யானார்"

எனவும்,

“ஐயர்நீர் வருதல் வேண்டு என்றவர் அழைத்த போதிற் றெய்வநீ றணிவார் தானைத் திறத்தினர் தம்மை நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/92&oldid=1587538" இலிருந்து மீள்விக்கப்பட்டது