உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

  • மறைமலையம் - 22 ×

"ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து

நாயிலாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறி காட்டித் தாயிலாகிய இன்னருள் புரிந்தஎன்

தலைவனை நனிகாணேன்

தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே”

என்று நைந்தழுது பாடுதல் காண்க; இதனுள் ‘மிகுதியுங் காணேன்' எனப் பொருள்படும் “நனிகாணேன் என்னுஞ் சொற்றொடர் அடிகள் தம் ஆசிரியனைப் பல நாளுங் காணப் பெறாது பிரிந்ததனை நன்கு புலப்படுத்துதல் உணர்ந்து கொள்க.

இனிக், குதிரைத்திரள் விலைகொள்ளும் பொருட்டுக் கொணர்ந்த பொருட்குவையும் பிறவும், தாம் இறைவ னால் அடிமைகொள்ளப்பட்டஞான்று அடிகள் தம் ஆசிரியன் திருவடிக்கீழ் வைத்துத், தம்முயிரையும் உடம்பை யுங் கூடச்சேர்த்து எல்லாவற்றையும் அவர்க்கே உரிமையாய்க் காடுக்க, ஆசிரியனும் அவைதம்மை யெல்லாம் ஒருங்கேற்றுப் பின்னர்ச், செல்வப்பொருளை அடிகளுக்கே நல்கி “இப் பொருளையெல்லாம் கோயில்கள் எடுப்பித்தற்கும் அவற்றைப் பழுதுபார்ப்பித்தற்கும் பிறவற்றிற்கும் ஆகப், பல திருப்பணி கட்குக் கொடுமின்! மேலான அருந்தவத்தினர்க்கு வழங்குமின்! நுகர்தற்கின்றி வறுமையான் நலிந்தார்க்கு உதவுமின்!” என்று அருள்செய்து மறைந்தமையின், அடிகளும் அப்பொருண் முழுமையும் அங்ஙனமே செலவிட்டார்.

அடிகள் தம்மையுந் தமக்குரிய பொருளையுந் தம் சிரியனுக்கு னுக்கு உரிமையாக்குதலே பொருத்தமாமன்றித், தம்முடையவல்லா அரசன் பொருளை அவற்குரிமையாக் குதலும், பின்னர் அவன் பணித்தவாறு செலவிட்டு அழித்தலும் அமைச்சியற் கட மை மயின் வழுவுதலாதலொடு பிறர் பொருளைக் கவர்ந்து செலவழித்த குற்றத்தினையும் அடிகள்பால் ஏற்றுமன்றோவெனின்; அற்றன்று, அடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/91&oldid=1587537" இலிருந்து மீள்விக்கப்பட்டது