உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

66

57

மாணிக்கவாசகருடன் போந்தவர், அவர் துறவொழுக்கத் தினராய் மாறியது கண்டு, பாண்டியமன்னன் வினைமேற் கொண்டு வந்த கடமையை நினைவுறுத்தி அவரை யழைப்பவும், அவர் அன்னார் சொற்களை உணராமல் தம்மை மறந்திருத்தல் தெரிந்து திரும்பிப் பாண்டிய மன்னன்பாற் சென்று நிகழ்ந்தமை அறிவிப்ப, அவன் பெரிதும் வெகுண்டு அடிகட்கு ஒரு திருமுகம் எழுதிவிடுப்ப, அடிகள் அதனை ஏற்றுத் தம்மையாண்ட நல்லாசிரியன் முற்சென்று வைக்கப், பின்னர் அவ்வருட்குரவன் அவரை அஞ்சாவண்ணந் தேற்றி, அவர்க்கு மணிக்கலன்கள் பலவும் நல்கி ஆவணித்திங்கள் மூல நாள் அன்று பரித்திரள் வரும் என்று மீனவன்பாற் சென்று இயம்புதி, யாமே அந்நாளில் அழகிய வாம் பரித்திரள் எனக் கூறி விடுத்தனன் என்றுரைக்கு மாற்றால், அவ்வாசிரியன் அடிகளை அடிமை கொண்டருளிய பின்னும் பலநாட்கள் அத்திருப்பெருந்துறைப் பூங்காவின்கண் அமர்ந்தருளினானெனக் கொள்வதாயிற்று. இங்ஙனம் முரணும் இவ்விருவேறு வரலாறுகளுள் எதுமெய்யென்று ஆராயின், நம்பியார் உரையே உண்மையாமென்பது புலனாம்.மாணிக்கவாசகப் பெருமானை ஆண்டருளிய ஆசிரியன் இந்நிலவுலகத்து மக்களுள் ஒருவனாயின், அவன் பலநாள் இந்நிலமிசைத் தங்கி னான் என்றல் பொருத்தமேயாம். மற்று, ஆங்ஙனம் எழுந் தருளிய குரவன் இறைவனே என்பது நன்கு புலப்பட,

காண்டுவருவம்

“ஈறி லாதநீ எளியை யாகி வந்து ஒளிசெய் மானுட மாக நோக்கியுங் கீறி லாதநெஞ் சுடைய நாயினேன்

கடைய னாயினேன் பட்ட கீழ்மையே’’

என்று அடிகளே அருளிச் செய்தமையின், அவன் அடிகளை யாட்கொண்ட பின்னும் பலநாள் இம் மண்மிசைத் தங்கினா னென்றல் அமையாது. அதனால், அவரை அடிமைகொண்டு ஐந்தெழுத்துண்மை உணர்த்திய ஞான்றே இறைவன் மறைந்தருளினான் என்னும் நம்பியார் உரையே வாய்வதா மென்க. அடிகளும தம் ஆசிரியனைப் பலநாளுங் காணப் பெறாது கதுமெனப் பிரிந்தமையாற் பெரிதும் ஆற்றாராய்,

L

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/90&oldid=1587536" இலிருந்து மீள்விக்கப்பட்டது