உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் 22

தல்லது, தில்லையில் அருளிச்செய்யப்பட்டதன்று. இதன் மூன்றாஞ்செய்யுளிற் “றென்னன் பெருந்துறை அத்த”ரை நினைவு கூரும் அவ்வளவே சொல்லப் படுதலின் இஃது அங்கு அருளிச்செய்த தாகாது.

இங்ஙனம் திருவெம்பாவை'

திருப்பெருந்துறை

யிலும், 'திருவம்மானை' திருவண்ணாமலையிலும், 'திருப்

பொற்சுண்ணம்,' 'திருக்கோத்தும்பி,' 'திருத்தெள்ளேணம்,' 'திருச்சாழல்', 'திருப்பூவல்லி', 'திருத்தோணோக்கம்' என்னும் ஆறுந் தில்லையிலும் ‘திருவுந்தியார்' திருக்கச்சியேகம் பத்திலும் திருப்பொன்னூசல்,' ‘அன்னைப்பத்து' என்னும் இரண்டும் திருவுத்தரகோச மங்கையிலும் ஆக ஐந்து வேறு திருப்பதிகளில் அவை பதினொன்றும் அருளிச் செய்யப்பட்டனவாயினும், தம்மைப் பிரியாது தம்மோ டுடன்போந்த தம் காதற் கற்புடை மனைவியாரும், அவர்தம் இன்னுயிர்ப் பாங்கிமாரும், ஈழமண்டலத்துப் புத்தமன்னன் மகளாரும், தம் அருமைச் சிறு புதல்வியாரும் ஆகிய மகளிர் பொருட்டுச் செய்யப்பட்டமை யால் அப்பதினொன்றும் ஒரு தொகுதியாய் ஒருங்கு வைக்கப் பட்டமை பொருத்தமேயா மென்க.

இனி

அடிகளைப் போலவே அவர்தம் மனைவி யாருந் தன்றிருவடிக்கண் அளவுபடாப் பேரன்புவைத்து ஒழுகுதல் கண்ட சிவபெருமான் அவர்க்கு மிக இரங்கி அவர்பொருட்டு அடிகளின் உணர்வைச் சிறிது நெகிழ்த்திப் புறத்தே செல்ல விட, அடிகளுந் தம்பால் வந்து குழுமிய தம் மனைவியார்க்கும் பிறர்க்கும் சிவபிரானுடைய அருட்பெரும் பரிசுகளைச் செழுந் தமிழ்ப் பாக்களில் எடுத்தோதி எல்லா ருள்ளங்களையும் பேரன்பாம் பெரும்பெருக்கிற் படிவித்துத்

தாமும் அதிற்றலைநின்று வரலானார்.

அடிக்குறிப்புகள்

1.

2.

திருவாசகம். திருச்சதகம் (91)

திருத்தெள்ளேணம் (4)

3.

கோயின்மூத்த திருப்பதிகம் (4)

4.

திருச்சதகம் (3)

5.

திருச்சதகம் (57)

6.

திரும்வெம்பாவை (15)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/101&oldid=1587547" இலிருந்து மீள்விக்கப்பட்டது