உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மறைமலையம் 22

யாட்கொண்ட அருந்தவப் பேறே, தேவர் தந் தேவே, பாண்டிய மன்னன் பரிமாக்கொண்டு வல்லே வருகவெனப் பணித்திட்டான்; அடியனேன் அவன் பணித்தவாறு அவன்பாற் செல்லுமாறு யாங்ஙனம்? அருள்செய்யாய், குருந்தின் மறைந்ந மறைக்கொழுந்தே!" என்று கூறி இரப்ப, ஐயனும் அம் மெய்த்தவர்க்கு இரங்கி “நினக்கு யாம் உண்டு, உள்ளத்தில் அச்சங்கொள்ளேல், உயர்ந்த புரவிகள் விரைவில் வருமெனப் பாண்டிய மன்னனுக்கு ஓர் ஓலை யெழுதிவிடு' என்று அவரது செவிக்கு மட்டும் புலனாகக் கட்டளையிட்டருளினார்.

அதுகேட்ட அடிகளும் தம்மிறைவனைப் பணிந்து போந்து, "புகழ்மிக்க பாண்டிய அரசர்க்கு அடியனேன் வாதவூரன் தெரிவிப்பதைத் தாம் திருவுளத்து ஏற்றருளல் வேண்டும்; பிறர் கூறும் புறங் கூற்றுரைகளைக் கேட்ட லாகாது; ஐந்தாறு நாட்களிற் றிரண்ட குதிரைகள் வரும்; அவை தம்மைக் கட்டி வைப்பதற்குப் பந்திகளும், அவை அருந்துவதற்குத் தண்ணீர்த் தடங்களும் அமைத்துத், தெருக்களையும் நகரங்களிலுள்ள வையாளிகளையும் ஒப்பனை செய்வித்து, அடியேனைக் குற்றமாக நினையாமற் பண்டு போல் மெய்யாகத் தெளிந்து அன்பு பாராட்டல்வேண்டும்” என எழுதிய திருமுகத்தைத் தூதுவர் கையிற் கொடுத்துவிடுத்த பின், அமைந்த வுள்ளத்தோடுங் குருந்தமரத்தின் மருங்கே, அகமுகமாய்த் திரும்பிய வுணர்வைத் தம் குரு முதல்வன் திருவுருவின்கண் நிறுத்தி அறிதுயிலில் அமர்ந்திருந்தார். அப்போது, அவரை யாண் ஐயன் அவரது அகக் கண்ணெதிரே தோன்றி, “நாம் குதிரைகளைப் பாண்டியற்குச் சேர்ப்பித்தல் திண்ணம்; அவற்றை யாம் சேர்ப்பிக்குமுன் நீ பாண்டியன்பாற் சென்று, மனத்திட்பத்தோடும் அவன் களிகூரத்தக்க சொற்களைச் சொல்லிக்கொண்டிரு புகன்று மறைந்தருளினான்.

என்று

அடிகளும் அவ்வறிதுயில் நிலையினின்றும் விழித் தழுந்து, தங்குரவன் தம்மை அடிமைகொண்ட குருந்த மரத்தினையுந் திருப்பெருந்துறையினையும் பிரிதற்கு ஒருப் படாராய்ப் பெருக வருந்திப், பின்னர்த் தம் ஆண்டவன் கட்டளையை நினைந்து ஒருவாறுளந்தேறி மதுரைக்குத் திரும்பினார். தாம் வருதற்குமுன் எழுதிவிடுத்த திருமுகத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/103&oldid=1587549" இலிருந்து மீள்விக்கப்பட்டது