உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1

71

கண்டு சினம் அவிந்த பாண்டியமன்னனும் அடிகளை அன்பாக ஏற்றுத் தன தரசிருக்கை மண்டபத்தில் தனதருகே அவரை இருத்தி, ஏனை யமைச்சரையெல்லாம் போகவிட்டு, அவரோடு தனி யிருந்து, “எடுத்துச்சென்ற பொருளுக்குக் குதிரை எவ் வளவு கொண்டீர்? அக்குதிரைகள் வந்திறங்கிய துறை முகங்களும் நாடுகளும் எவ்வெவை? அக்குதிரைகள் எவ்வளவு உயரமும் எவ்வெந் நிறங்களும் உடையன? அவை தம்முள் எமக்கு இசைந்தது யாது? அதன் இலக்கணங்கள் யாவை? கூசாமற் சொல்லவேண்டும்” என்று கேட்ப, அடிகளும் வள்ளியம்பலப் பெருமானை நினைந்து, "மன்னரேறே, மாராட்டகம் காம்போசம் ஆரியம் சாம்பிராணி சைந்தவம் முதலான நாடுகளிலிருந்து போந்த குதிரைகளையே மிகுதியாய்க் கொண்டேன். அவை சொல்லுதற்கரிய விரைந்த செலவினையுடையவை; கடலலையினும் அதன் முழக்கத்தினும் ஒன்றுக்கொன்று மிக்கெழுபவை; அவை தமக்கெல்லாம் இம்மதுரைமா நகரும் இடம் போதாது. அவற்றின் இலக்கணங் களையும், வகைகளையும் விரைந்த செலவினையும் விரித்துரைக்கப் புகுந்தால் அவை என் ஒரு நாவினால் உரைக்கப் படுந் தகையவல்ல. அப்பரிகளை நேரே காணும்போது

மாட்சிமையுடையீரே நன்குணர்வீர். யான் இவ்வாறு

விலைகொண்ட பரித்தொகுதியெல்லாம் மதுரை ஏகுதற்கு நன்னாள் ஆவது எதுவென்று கோள் நூல் வல்லாரை உசாவ, அவர் ஆவணித் திங்களின் மூலநாளே அதற்கு ஏற்பதாமென் றுரைத்தமையின் அந்நாளை எதிர்பார்த்தவாறாய்த் திருப்பெருந்துறையிலே யிருந்தேன், நும் படைஞரோ வன்றால் தாம் மதுரைக்கு மீளும் விருப்பால் என்னை விட்டகன்று இங்கே முந்துறப் போந்தார். போந்தவர் என்மேற் பொய்யானவைகளைப் புனைந்து கட்டி நுமக்கு உரைப்ப, நீரும் எளியேன்மேற் பெரிதும் வெகுண்டு, ‘கடிது வருக' வென ஓலை வரைந்து விடுத்தீர்; அதுகண்டு உடனே இங்குப் போந்தேன். குறிப்பிட்ட நாளிற் சிறந்த பரித்தொகுதி ங்கு வரும்,” என்று விடை கூறினார்.

அச்சொற்களைக் கேட்ட அரசன் மிகவும் உள்ளம் களிந்தானாய், “நுமக்கும் எமக்கும் உண்டான நட்பினைச் சிதைக்க நினைந்த கரவுடையார் சொற்களைக் கேட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/104&oldid=1587550" இலிருந்து மீள்விக்கப்பட்டது