உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் - 22

.

சவிப்

அங்ஙனம் அன்பிலாதேம்போல் எழுதிவிடுத்தேம். அது பற்றி இனி நீர் வருந்துதல் ஒழிமின்!” என்று பழைய நட்புரிமை பாராட்டிப் பேசி, மணிக்கலன்கள் குதிரைகள் வெண்பட்டுக் குடை முத்துமாலை பொற்சரிகை மிடைந்த போர்வைகள் பட்டாடைகள் முதலியனவெல்லாம் அடிகட்கு வழங்கி, அவர் தமது மனையகம் ஏகவும் விடை கொடுத்தான். அடிகள் அதுபெற்றதும், சொக்கப் பெருமான் திருக்கோயில் புக்குக் கரைகடந்த அன்பினால் நெஞ்சம் நெகிழ்ந்து நீராய் உருக இறைவனை இறைஞ்சியேத்தி, நாயிற் கடைப்பட்ட அடியேனையும் ஒரு பொருட்படுத்தியாண்ட தாயினுஞ் சிறந்த பரிவுடைப் பெருமானே, குதிரைகள் வருமெனப் பாண்டியற்கு உரைசெய்தேன்; அவன் தந்த பொருள்களையோ அடியார் தமக்குப் பயன்படுத்திவிட்டேன்; இனி ஆமாறு சொல்லாய் னி அருளுடை யரசே, நின்னை யன்றி வேறு புகலிடங் காணேன் அம்பலத் தெய்வமே” என்று கூறி யழுது குறையிரப்ப, அஞ்சற்க' எனும் ஓர் ஓசை அடிகளுக்குச் புலனாயிற்று. அது கேட்டலும் ஆறுதல் உடையராய் அடிகள் தம் மனையகஞ் சென்று தம் மனைவியார் மக்கள் சுற்றத்தாரிடை அமர்ந்திருந்தார். அப்பொழுது அடிகளின் சுற்றத்தாரெல்லாம் ஒருங்கு திரண்டு அவர்பாற் போந்து, அரசற்குரிய வினைமேற்கொண்டு குதிரை கொள்ள எடுத்துச் சன்ற பெரும்பொருட்டிரளை யெல்லாம் வறிதே செலவிட்டது பெரிதும் ஏதமாம், வேந்தன் சீறின் யாதாய் முடியுங் கொல்!' என்று இடித்துரைப்ப, அடிகள் அவர் சொற் களுக்கு அஞ்சாது, 'எம்பெருமானே மக்கள் வடிவிற் போந்து எளியேனை யாட்கொண்டருளினான்; அதனால் எனது பிறவித் துன்பமும் அற்றேன்; மன்னவற்குப் பிழைசெய்தல் ஆகா தென்பதுபற்றி இங்கு மீண்டேன்; அவற்குரிய பெரும் பொருட் கட னை ஒருவிரகாற் போக்குவேன்; இதற்கோர் ஐயம் இன்று; நீவிர் யார்? யாம் யார்? எல்லீரும் எமக்கு அயலவரே யாவீர்; இம் மாநிலத்தின்கண் எம்மை வெறுப்பார் யார்! உவப்பார் யார்! நீவிர் நுமக்குரிய வினைமேற் சென்மின்!" என்று கூற, அவ ரெல்லாரும் அடிகளை யகன்றுபோயினார்.

மற்றை ஞான்று, அரசற்கு நெருங்கிய ஏவலாளராய் உள்ளார் அடிகள்பாற் போந்து “புரவிகள் வந்தனவோ?" எனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/105&oldid=1587551" இலிருந்து மீள்விக்கப்பட்டது