உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1

73

தொழுது வினவ, அவர் “அவை மெய்யாகவே வரும், இப்போது விரைதல் வேண்டா; தெருக்களை யெல்லாம் கோடித்து வைக்கச் சொல்லுமின்! யாம் உரைத்தசொல் தப்பாது; அரசற்குக் கூறுமின்!' என்று சொல்லிவிடுப்ப, அவ்வேவலரும் அரசன்பாற் சென்று அடிகள் கூறியவற்றை அங்ஙனமே எடுத்துச்சொல்ல, வேந்தனும் மகிழ்ச்சி மிக்குத் தெருக் கடோறும் பசிய வாழைமரங்கள் நாட்டி, நிறைகுடங்கள் வைத்து, நறுமணங் கமழும் பூமாலைகள் தொங்கவிட்டு, இடங்கடோறுங் விளக்குகள் ஏற்றிப், பட்டாடைகளை மேன்மறைப்பாகக்

கட்டிக், குதிரைப் பந்திகள்

வையாளிகள் கழக மண்டபம் பண்ட ாரங்கள் மாடங்கள் திருமடங்கள் கோபுரங்கள் சொக்கபிரான் திருக்கோயில் அதன் வாயில்கள் முதலியனவெல்லாம் அழகுமிக்கு விளங்கக் கோடித்து, அம்மதுரைமாநகர் வான்நகரே யென்னப் பொலிவுறச் செய்தான். இப்பெருஞ் சிறப்புக்களையெல்லாங் கண்ட அமைச்சரில் ஒருவன், பாண்டிய மன்னன் தனித் திருக்கும் நேரம் பார்த்து அவனுழைச் சென்று வணங்கி, “எம் பொருநை நாட்டரசே! அடியேன் கூறுவதொன்றுண்டு; நும்பாற் சிறப்புப் பெயர்பெற்ற திருவாதவூரர் குதிரைகொள்ளும் பொருட்டுச் சோழநாட்டையடைந்தவர் நீறு பூசிய சிவனடியார் கையில் நின்பொருளையெல்லாங் கொடுத்துச சலவு செய்து விட்டார். நீர் விடுத்த தூதுவர் ஏகி நுமது ஓலையைக் காட்டியபின்னர், அவர் நும்பால் வந்து நுமது சீற்றத்தைத் தணித்துத் தாம் உயிர் பிழைக்கல் வேண்டி அன்புடை யார்போல் நின்று ஆவணி மூலத்திற் பரித்திரள் வருமெனக் கூறினார்; அவர் கூறிய வெல்லாம் பொய்யுரைகளாகும் மன்னரேறே!" என்று புகன்றானாக, அச்சொற் கேட்ட பாண்டியன் அருகுநின்ற தூதுவரை, வெகுண்டு நோக்கி "நீவிர் திருப்பெருந்துறைக்கு விரைந்துபோய் அங்கே குதிரைகள் உளவோவெனக் கண்டு விரைந்துவந் துரைமின்!” என்று பணித்தான்.

உடனே, வலிய தூதுவர் வல்லே திருப்பெருந்துறை சன்று அதன் கண்ணும் அதனைச்சூழ்ந்த பிறவூர்களின் கண்ணுந் தேடிப் பார்த்துங் குதிரைகளைக் காணாம்ை யின் வருத்தத்தோடுந் திரும்பிவந்து "பெருமானே! பரிகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/106&oldid=1587552" இலிருந்து மீள்விக்கப்பட்டது