உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

6

  • மறைமலையம் 22

கண்டிலேம்" எனப் பகர்ந்தார். பகர்தலும், பாண்டியன் மிகச் சினந்து தண்டத் தலைவரை நோக்கி, “நமது வினையைத் தான் முடிப்பதாகச் சொல்லி நமக்கு இடரே செய்வானாகிய அவ்வாதவூரனைத் துன்புறுத்திச் சிறையிலிட்டு நம்முடைய பாருளையெல்லாம் அவன்பா னின்றும் வாங்குமின்கள்!” என்று கட்டளையிட்டான். அத்தண்டத் தலைவர்களும் உடனே அடிகளின் எதிரே சென்று முனிவு கொண்ட முகத்தினராய் நின்று, “சீற்றமுடைய நம் மன்னன் அந்நாள் நுமக்குக் குதிரை காள்ளக் கொடுத்த பொருளையெல்லாம் நும்பால் நின்றும் வாங்கும்படி எமக்குக் கட்டளையளித் திருக்கின்றனன். அரசன் இங்ஙனங் கூறியது என்னையெனின், மன்னவனால் ஏவப்பட்ட ஒற்றர் பெருந்துறை சன்று அங்கே குதிரைகளைக் காணாராய்த் திரும்பி வந்து கூறிய மாற்றங்கேட்டு அரசனும் நும்பால்வைத்த நேசத்தை விட்டான்; இனி நீர் அமைச்சரா யிருந்து அரசாளுதற்கும் விடான்; இனிமேல் நீர் அரசற்குரிய பொருளையெல்லாந் தருதல் வேண்டும்” என உரைப்ப, அடிகள் ஏதுங் கூறமாட்டாராய் வாளா இருப்ப, அவரை வலிந்துபற்றிச் சென்று சிறையில் அடைத்தார்கள். சிறையில் அடைப்பித்த அத்துணையிற் பாண்டிய மன்னன் சினம் அடங்கானாய்ப், பின்னும் அவரை வருத்துதற்பொருட்டுப் பிரம்படிகாரரை ஏவ, அவரும் அவர்பாற் போந்து, அவரை அடித்துத் துன்புறுத்துதற்கு நெருங்கினவர் அவர்பால் வியக்கத் தக்க சில கடவுள் நிகழ்ச்சிகளையும் குழைந்துருகும் அன்பின் பெருக்கையுங் கண்டு அவரை அடித்துத் துன்புறுத்த மாட்டாராய் அஞ்சிநிற்ப, அஃது ஒற்றரால் உணர்ந்த அரசன் கூற்றினுங் கொடிய சிலரை ஏவ அவர் போந்து அவரைக் கடுவெயிலில் நிறுத்தி, அவரது அருமைத் திருமேனியை வளைத்து வருத்துவாரானார். அக்கொடுந்

பொறுக்கமாட்டாமற்,

“பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே

பற்றுநான் மற்றிலேன் கண்டாய்

சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே

திருப்பெருந் துறையுறை சிவனே

துன்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/107&oldid=1587553" இலிருந்து மீள்விக்கப்பட்டது