* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் யாரொடு நோகேன் யார்க்கெடுத் துரைக்கேன் ஆண்ட நீ அருள் இலையானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி யாயே”
ய
என்பதை முதலாக உடைய வாழாப்பத்தும்.
“சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் நீற்றாய்
பங்கயத் தயனும்மால் அறியா நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் நிறைமலர்க் குருத்தும், மேவியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே.
என்பதை முதலாகவுடைய
―
1
75
அருட்பத்தும்
அருளிச்
செய்து அடிகள் மிக நைந்துருகினார் என்பது புலனாகின்றது. இவ்வாறு துன்புறுத்தப்பட்ட காலத்திலேயே "குழைத்தாற் பண்டைக் கொடுவினை நோய்" எனத் துவக்குங் குழைத்த பத்தையும் அடிகள் அருளிச் செய்தாரென நம்பியார் திருவிளையாடல் உரையாநிற்கும்.
இவ்வாறு, திருவாதவூரடிகள் அரசன் ஏவிய வன் கண்ணரால் துன்புறுத்தப்பட்டு அத்துன்பம் பொறாமல் அழுது பாடுதலும், அடியார் துயர்நீக்குந் திருப்பெருந் துறை யாண்டவன் அவ்வூர்க்குப் பக்கத்தேயுள்ள மிழலை நாட்டு நரிகளையெல்லாம் வருவித்து, அவை தம்மை யெல்லாம் அழகிலும் நடையிலுஞ் சிறந்தவாம் பரிகளாக உருமாற்றிக், கட்புலனாகாத நுண்ணுடம்பில் அணுக்கராய் நிற்குந் தன் றிருவடித் தொண்டரைக் குதிரைச் சாத்தாய்க் கட்புலனாம் உரு
வில் வருமாறு கற்பித்துத், தானுமோர் அளவுபடாச் சிறப்பினையுடையதொரு புரவிமீது அமர்ந்து, அக் குதிரைத் திரளும் அதனை நடாத்தும் வணிகச் சாத்துந் தன்னைப் புடைசூழ்ந்துவரத், திருப்பெருந்துறையிலிருந்தும் புறப்பட்டு, அவ்வூர்க்கு மேல்பால் உள்ளதாகிய மதுரைமாநகரை நோக்கி விரைந்து வந்தனன். இவ்வாறு வந்தமையினை அடிகளே,