உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் பெரிய தென்னன் மதுரையெல்லாம்

பிச்சதேற்றும் பெருந்துறையான்”8

எனவும், அடிகளே L பலகாலும்

1

77

பலவிடத்தும் அருளிச்

செய்திருத்தல் கொண்டு நன்கு தெளியப்படும். அங்ஙனந் திருப்பெருந் துறையிலிருந்து சிவபிரான் கொணர்ந்த குதிரைகள் நரிகளால் ஆக்கப்பட்டனவேயா மென்பதூஉம் இறுதியிற் காட்டிய “நரியைக் குதிரைப் பரியாக்கி” என்பதனாலும்,

66

"அரியொடு பிரமற் களவறி யொண்ணான்

நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்”9

“ஒருங்குதிரை உலவுசடை யுடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை யாக்கியவா றன்றேயுன் பேரருளே”10

என்பவற்றாலும் நன்கு தெளியப்படும்.

கு

இவ்வாறு று இறைவன்

நரிகளையெல்லாம்

பரி

களாக்கிக் கொணர்ந்தது திருவாதவூரடிகள் பொருட்டே யாமென்பதூஉம்,

“ஞாலம் மிகப் பரிமேற்கொண்டு நமையாண்டான்

எனவும்,

“பரிமேற் கொண்ட சேவகனார் ஒருவரை யன்றி யுருவறியாது, என்றன் உள்ளமதே”12

எனவும்,

6

“இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள் ஒருங்குதிரை யுலவுசடை யுடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை யாக்கியவா றன்றேஉன் பேரருளே.'

எனவும் அடிகளே தம் அருமைத் திருமொழிகளால் எடுத்தோதுதல் கொண்டே தெற்றென விளங்கற்பாலதாம்; இம்மூன்று மேற்கோள்களுள் முன்னையது ‘மாயம் மிகக் குதிரைமேல் எழுந்தருளிவந்து நம்மை ஆண்டு கொண்டான்’ என்றும், அடுத்தது 'குதிரைமேல் எழுந்தருளி வந்த பாகனார் ஒருவரையல்லாமல் வேறொருவரது உருவத்தி உள்ளமானது அறியமாட்டாது’ என்றும், மூன்றாவது,

என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/110&oldid=1587556" இலிருந்து மீள்விக்கப்பட்டது