உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

7. இறைவன் மண்சுமந்து அடிபடுதல்

இவ்வாறு அளவுக்கு மிஞ்சிப் பெய்த பெருமழை யினால் வெள்ளம் பருகி வைகையாற்றில் புரண்டு வரலாயிற்று. அடிகளை அவ்யாற்று மணலில் நிறுத்தி வருத்திய தண்டற்காரரும் அவரை விடுத்துத் தத்தம் மனையகம் நோக்கி ஓடினர். தம்மைக் காத்தருளிய சிவபிரான் திருவருளை நினைந்து நினைந்துருகிய உள்ளத்தினராயும் அழுதகண்ணின ராயும் அடிகளும் வைகையாற்றை விட்டு அதன் கரைமீ தேறிச் சொக்கப் பெருமான் திருக்கோயிலுட் சென்று அவனைத் தாழுது வழுத்தியபடியாய் இருந்தார்.

இதற்குள் அவ்யாற்றின் வெள்ளங் கரைகளை நெடுக உடைத்து மதுரைமா நகர்க்குள் எங்கும் புகுந்து நிரம்பி மேன்மேல் உயர்தல்கண்ட அந் நகரத்து மாந்தரெல்லாங் கூக்குரலிட்டு ஓலமிடுவாரானார். இவைகளை யுணர்ந்த பாண்டிய மன்னன் நெஞ்சங் கலங்கித் “திருவாதவூரடிகளை யான் ஒறுத்துப் பெரும்பிழை செய்தமையால் இப்பேரிடர் நேர்ந்தது போலும்! என் செய்வோம்!” என உளம்வருந்தித், தன் அமைச்சரையெல்லாங் கூஉய் "என்றும் வாரா இப்பெரு வெள்ளம் இன்றுவந்து இந் நகரை அழிப்பான்புக்க தென்னை! இதற்குடனே செயற்பாலது யாது?” என்று வினவுதலும், அவரெல்லாம் முன்நாள் பின்நாள் நிகழ்ச்சிகளை

நன்குணர்ந்து பார்த்துத், “திருவாதவூரர் சிவபிரான்மாட்டு வரம்பிகந்த பேரன்புடையராய்க் காணப்படுதலின், அவரது தன்மையுணராதே அவரை வருத்திப் பிழைசெய்ததனாலே தான் இது நேர்ந்தது! அவரை வருவித்து வணங்கி அவரது அருளைப் பெற்றால் மட்டும் இவ்வெள்ளந் தணியும்,” என விடை பகர்ந்தார்கள். தனது கருத்தும் அவர்களது கருத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/129&oldid=1587575" இலிருந்து மீள்விக்கப்பட்டது