உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

97

ஒத்திருக்கவே பாண்டியன் தான் செய்தவை யெல்லாம் பிழையெனத் தெளிந்து, சொக்கப்பெருமான் திருக்கோயிலி லிருந்த அடிகளை வருவித்துத் தான் செய்பிழையினைப் பொறுக்கும்படி வேண்டி, "வெள்ளம் ஊர்க்குள்ளே புகாமல் வடிந்துபோகும்படி பணித்தருளல் வேண்டும்,” எனக் குறை யிரந்து, “உடைபட்ட கரைகளையும் ஊரிலுள்ளார் அனைவரும் ஒருங்குவந்து நின்று அடைக்குமாறும் தேவரீரே தலைவராய்

""

நின்று செய்தல் வேண்டு மெனவும் பணிவுடன்

மொழிந்தான்.

முன்னர் அரசன் தம்மேற் சினந்தகாலத்தும் பின்னர் இப்போது மகிழ்ந்த காலத்தும் வெறுப்பு விருப்பற்று ஒரு நிலையில் நின்ற உள்ளத்தினரான அடிகள் தம்மையாட் கொண்ட ஐயனருளை வியந்து வெளிப்போந்து, பரிமேல் வந்த பெருமானது திருவுருவத்தை உள்ளத்தில் உருகி க உன்னி வள்ளந் தணிந்து ஏகுமாறு வேண்டியவாறாய் வைகை யாற்றங் கரையில், வேந்தன் பணி செய்வாரொடும் வந்து சேர்ந்தார். சேர்ந்து, மதுரைமா நகரில் உள்ள ஒவ்வொரு வீட்டாரும் உடைந்துபோன கரையில் இவ்விவ்வளவு இடம் அடைத்துக் கரையை உயர்த்துதல் வேண்டுமென அப் பணியாளாராற் பறையறைவித்து, அற்றைநாள் மாலைக்குள் அவரெல்லாம் அவை யடைபடுமாறு செய்விக்க வெனவுங் கட்டளையிட்டருளினார். தன் அடியார் துயர்களையும் பொருட்டு வெள்ளத்தைப் பெருக விட்ட

இறைவன் துயர்ஒழிந்த அடிகளின் வேண்டுகோளுக்கிணங்கி அஃது ஊரைவிட்டு வடிந்தேகவுஞ் செய்தான். பறை யறைவிப்புக் கேட்ட ஊரவரெல்லாம் விரைந்துவந்து தத்தமக்கு அளந்து விட்ட கரையினை அடைக்கும் முயற்சியில் முனைந்து நிற்க, அப்பணியாளர் அவரை அத்தொழிலில் விரைந்தேவுதற்கண் முறுகி நிற்பாரானார்.

திங்ஙனம் நடவாநிற்க, அம் மதுரைமா நகரிற் றன்கிழக்கு மூலையிலுள்ள ஒருமனையில் பிட்டுச்சுட்டு விற்றுப் பிழைக்கும் நரை முதியோளான ஒரு பிட்டு வாணிச்சி இருந்தனள். அவள் சிவபிரான்மாட்டுப் பெருகி முதிர்ந்த பேரன்புடையவள். அவளுக்கு நெருங்கிய உறவினராயிருந்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/130&oldid=1587576" இலிருந்து மீள்விக்கப்பட்டது