உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் 22

ரெல்லாம் இறந்துபட்டமையின், அவள் தன்னந் தனியாளா யிருந்து பிட்டு விற்பனையில் வரும் மிகச் சிறு ஊதியப் பொருளைக்கொண்டு உயிர் வாழ்ந்து வரும் ஏழையாவள். ஏனையோர்க்கு அளந்துவிட்ட பங்குகளை யெல்லாந் தங் கூலியாட்களைக் கொண்டு அடைப்பிப்போரும், கூலியாட்கள் கிடைக்கப் பெறாவிடின் தாமே யடைப்பாருமாய் நிற்க, இப் பிட்டு வாணிச்சிக்கு அளந்துவிட்ட பங்கோ முதுகு கூனி வலிவிழந்த அவள் தன்னால் அடைக்கக் கூடாமலும் தக்க கூலிகொடுக்கப் பொருளில்லாதவளாகலின் கூலியாள்

கொண்டு அதுசெய்ய இயலாமலும் வறிதே கிடந்தது.

அதனைக் கண்ட வேந்தன் பணியாளர் அவள்பாற் சென் று அவளை நெருக்க, அவள் அத்துன்பம் பொறுக்க மாட்டாமல் தனது நிலைமைக்கேற்ற கூலியாள் கொள்ளும் பொருட்டு அந்நகரெங்கும் மெல்லமெல்ல உழன்று திரிந்தும் எவருங் கிடைக்கப் பெறாமையால், நெஞ்சம் அஞ்சிக் கலங்கி, மேலுந்திரிவதற்கு இயலாமல் இளைப்புற்றுச் சொக்கப்பிரான் திருக்கோயில் வாயிலிற் சென்று நின்று, அழுது குறையிரப் பாளானாள். இவ்வாறவள் நிற்கையில், தலையிற் கவிழ்த்த கூடையும் தோள்மேல் மாட்டிய மண் வெட்டியுங் கொண்டு, புழுதிபடிந்த மேனியனாய், அரையில் அழுக்கடைந்த பழந்துணியுடுத்தவனாய்க் கட்டழகிற் சிறந்த ஓர் இளைய கூலியாள் என்னைக் கூலிக்கு ஏவல் கொள்வார் உண்டோ?' எனக் கூறிக்கொண்டு அவ்வழியே வரக்கண்டாள்.

கண்டதுந், தான் உற்ற துயரஞ் சிறிது தணியப் பெற்றாளாய் அக் கூலியாளை அருகழைத்து, “மைந்தனே! வைகையாற்றங்கரையுடைப்பில் எனக்கு அளந்துவிட் டிருக்கும் பங்கை அடைத்துத் தருவாயோ?” என்று கேட்டாள். அதற்கவன், “அன்னாய்! அப்படியே அடைத்துத் தருகின்றேன். எனக்கு யாது கூலிகொடுப்பாய்?" என்றான். “அப்பனே! உனக்குக் கூலிகொடுக்க என்கையிற் பொருளில்லை. யான் சுட்டுவிற்கும் பிட்டினையே உனக்குக் கூலியாகத் தருவேன். அது தின்பதற்குச் சுடச்சுட நறுவிதாய் மணமுடையதாயிருக்கும்,”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/131&oldid=1587577" இலிருந்து மீள்விக்கப்பட்டது