உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1✰

99

என்றனள் அம்முதியோள். “அம்மே! நீ வட்டமாய்ச் சுட்டு விற்கும் முழுப்பிட்டுக்கூடக் கொடுக்க வேண்டுவதில்லை. அப்பிட்டுகளினின்று உதிர்வனவற்றை எனக்குக் கூலியாகக் கொடுத்தால் அவையே போதும். இப்போதெனக்கு மிகப் பசிக்கின்றது. உதிர்ந்துபோன சுவைப்பிட்டை எனக்கு ட்டால் அதனை முந்தத் தின்று இளைப்பாறிப் பிந்தி நின் கரையைப் போய்க் கட்டுவேன்,” என்றான் அக்கூலியாள். அதற்கவள் மகிழ்வுடனிசைந்து அங்ஙனமே தந்த பிட்டினுதிர்வை அவன் ஏற்றுத் தனது அரைத்துணியிற் கட்டிவைத்து, 'இதனை யொப்பதொரு சுவைப்பண்டம் வேறில்லை!' எனச் சொல்லிய வாறாய் அதனைத் தின்றுகொண்டே வைகையாற்றங்கரை மருங்கு சென்றான்.

அம் முதியோளும் தனக்குரிய கோலறையைக்

காட்டும் பொருட்டு அவனோடு கூடவே வைகையாற்றங் கரைக்குத் தானுஞ் சென்றாள். சென்று, அங்குநின்ற அரசன் கணக்கர் அவனைப் 'பிட்டு வாணிச்சியின் கூலியாள்' என்று தமது ஏட்டில் வரைந்து காள்ளுமாறு செய்வித்து, மனமகிழ்வோடுந் தனது மனையகந் திரும்பிப் பிட்டுச் சுட்டிருப்பாளானாள்.

இவளது பங்காகிய கோலறையை அடைக்கச் சென்ற அக்கூலியாளோ அதனை அடைக்குந் தொழிலைச் செய்யாமல், அம் முதியோள்பாற் பெற்றுவந்த அப் பிட்டை இடையிடையே தனது மடியினின்றும் எடுத்தெடுத்துத் தின்பதும், 'இது மிக்க சுவையினையுடைத்து' என்று சொல்லிக் கொண்டே ஆடுவதும் பாடுவதுஞ் செய்யா நின்றான்.அரசன்றன் ஏவலாளர் தன்னருகே வரக்கண்டால் ஒருகூடை மண்ணை வெட்டி எடுத்துச் சுமந்து கொண்டு மெல்லப்போய்க் கரையிற் கொட்டி அதனால் இளைப்புற்றான்போல் நிற்பன். இவ்வாறு மண் சுமந்த உழைப்பால் வியர்வை மிக வரப்பெற்று அதனைக் கழுவு வான்போல் அவ்வாற்று நீருட்சென்று குளிப்பதும், அதன் கண் நீந்தி விளையாடுவதுஞ் செய்வன். பின்னர்க் கரையேறி ஏனைக் கூலியாட்களையெல்லாம் நோக்கிப் பேசுவதும் நகைப்பதுஞ் செய்வன். அதன்பிற் றனக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/132&oldid=1587578" இலிருந்து மீள்விக்கப்பட்டது