உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

  • மறைமலையம் 22

பசியெழுந்ததெனக் கூறிக் கொண்டு அம் முதியோள்பால் இடையிடையே சென்று 'அம்மே! மண்சுமந்த உழைப்பால் எனக்கு மெத்தப் பசிக்கின்றது, உதிர்ந்த பிட்டை யிடு' என்று கேட்டு, அவளும் சுடச்சுடப் பெரும்பாலும் உதிர்ந்து போன

நறுஞ்சுவைப் பிட்டை யிட, அவற்றைப் பெற்றுத்

தின்றுகொண்டே அவ் யாற்றங்கரைக்கு மீள்வன், மீண்டு, முன்போலவே சிறிது மண்ணைச் சுமந்தும், அதனைக் கரையிலிட்டும், பின்னர் பின்னர் நீரில் நீரில் நீந்தி விளையாடியும், கரையேறியாடியும், மற்றைக் கூலியாட் களோடு சொற்போர் தாடுத்தும், பின்னர் அவரோடு நகைத்தும், மன்னவர் காவலர் கடுகின் அதற்கஞ்சுவான்போற் காட்டி அவரை ஏமாற்றியும், அவர்கள் தன்னைப் பிடித்தடிக்க நெருங்கினால் விரைந்தோடி ஆழமான ஆற்றுவெள்ளத்தி னிடை நீந்திச் சென்றும், கண்டாரெல்லாம் 'இவன் பித்தனோ!' என்று சொல்ல வேலை செய்யாமல் அதனை மழுப்பிவிடலானான். உச்சிப்பகல் கழிந்து, ஞாயிறு மேல்பாற் சாயும் பிற்பகல் வருதலும், வேலை செய்தமையால் வந்த அயர்வு தீர்ப்பான் போல், மற்றவர்க்குத் தெரியாமல் மறைவாய்ச் சென்று அவ் வாற்றங்கரை மருங்கினதொரு கொன்றைமர நீழலில் மணலை அணையாகச் சேர்த்து, மண் கூடையைத் தலையணையாக வைத்துக்கொண்டு துயில்வானாயினன்.

இவன் இவ்வாறு துயிலிலிருக்க மாலைப்பொழுதும் வந்தது. ஊரார் எல்லாம் தத்தமக்கு அளந்துவிட்ட கோலறைகளை அடைத்து, யாற்றங்கரையையும் உயர்த்து விட்டனர். பாண்டிய மன்னன் கரைமுழுதும் அடைக்கப் பட்டதாவெனக் காணும் பொருட்டுத், திருவாதவூரடி களைத் தலைமையாக்கொண்ட அமைச்சர் குழாத் தோடும் வைகையாற்றங் கரையருகே வந்துசேர்ந்தான். சேர்ந்ததும், அங்குள்ள கரை யுடைப்புகளை யெல்லாம் வரிசையாகப் பார்த்துக்கொண்டு வந்து கடைப்படியாகப் பிட்டுவாணிச்சி பங்கண்டை வருதலும், அஃது அடை படாமல் இருக்கவும், அதன் வழியே வெள்ளம் மிகுந்து பெருகிப் பக்கத்துள்ள கரைகளையும் அறுக்கவுங் கண்டு பாண்டியன் கதுமெனச் சினங்கொண்டு, மருங்கே நின்ற ஏவலரை நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/133&oldid=1587579" இலிருந்து மீள்விக்கப்பட்டது