உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

18

101

ஃதேன் அடைக்கப்படவில்லை?' என்று உறுக்கி வினாவ, அவர்களுள் தலைவனாவான் அரசனைப் பணிந்து 'வேந்தர் பெருமானே! இது முதியோளான பிட்டுவாணிச்சி கோலறை; அவளுக்குக் கூலியாளராய் வந்த கொற்றாள் ஒருகூடை மண்ணாவது வெட்டியிட்டானில்லை; அவன் இன்று முழுதும் விளையாட்டிலேயே காலங்கழித்தான்; அவனைப் பிடித்து அடித்து வேலைவாங்க எவ்வளவோ முயன்றும் அவன் எம் கையிற் பிடிபட்டானில்லை,' என்று அஞ்சிக் கூறினான். அதனைக்கேட்ட அரசன் பின்னும் பெருஞ் சீற்றமுற்று ‘ஆ! அப்படியா! அவனை எப்படியாவது தேடிப்பிடித்து என்பாற் கொணர்மின்கள்!' என்று கூறினான்.

உடனே அரசன் காவலர் பலர் அங்குமிங்குமாய்

ஓடித்தேட, அக்கொற்றாள் அக்கரையின் ஓர் ஒதுக்

கிடத்தே ஒரு கொன்றைமர நீழலிற் படுத்து உறங்கக் கண்டு அவனைப் பிடித்தற்கு நெருங்கினார்கள். அவர் நெருங்குதலைக் கண்ட க்கொற்றாள் திடுமென எழுந்து, தன் மண் வெட்டியால் மண்ணையெடுத்துக் கூடையிலிட்டு அதனைச் சுமந்துகொண்டு வேலை செய்வான் போல மெல்ல இயங்க, அவ்வேவலர் அவனைப் போய்ப் பற்றிக் கொண்டார்கள். பற்றியவாறே அவனை ஈர்த்துக் கொணர்ந்து பாண்டியனெதிரே நிறுத்த, அவன் அக்கொற்றாளை நோக்கி, 'ஏடா! பிட்டு வாணிச்சிக்கு அளந்துவிட்ட இக்கோலறையை அடையாமல் நீ இன்று முழுதும் விளையாடியதென்னை?” என்று சினந்து வினாவ, அவன் ஏது முரையாமல் வாளாநின்றனன். அதுகண்ட பாண்டியன் பின்னுஞ் சீற்றம் மிக்குத், தன்கையிற் பொற்பிரம் பொன்றை வாங்கி ஓங்கி வீசி அக்கொற்றாளின் முதுகின்மேற் புடைத்தனன்.

புடைத்ததும் அவ்வடி சுறீரெனப் பாண்டியன் முதுகிலும், திருவாதவூரடிகளை யுள்ளிட்ட அமைச்சர் முதுகிலும், அரசனேவலர் முதுகிலும், ஊரவர் எல்லார் முதுகிலும் உயிருடைப் பொருள்கள் எல்லாவற்றின் முதுகிலும் பட்டது; அதே நேரத்தில் எல்லார் வாயில் நின்றும் ‘ஓ!' என்னும் ஓர் அலறுதல்ஒலி எழுந்தது; இங்ஙனம் அக்கொற்றாளை அடித்த அடி எல்லார் முதுகிலும்பட்ட ஓர் இமைப்பொழுதிற்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/134&oldid=1587580" இலிருந்து மீள்விக்கப்பட்டது