உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மறைமலையம் 22

அவன் தன்தலையிற் சுமந்திருந்த ஒரு கூடை மண்ணையும் உடைபட்டிருந்த பிட்டு வாணிச்சி பங்கிற் கொட்டினான்; அவ்வுடைப்பும் அடைபட்டது; ஆனால் தம் கண் எதிரே சென்ற அக்கொற்றாளை எவருங் கண்டிலர்.

L

உடனே, அங்கு நின்ற திருவாதவூரடிகள், அடிபட்டு மறைந்த அக்கொற்றாள் சிவபிரானேயாதல் தெளிந்து; அடியற்ற பனைபோல் நிலத்தின்மேல் விழுந்து புரண்டு “கடவுளர்க்கும் அரியையாகிய நீ நாயினேம்பொருட்டு எளிய கொற்ளாளாப் போந்தனையோ! போந்து திருமுடிமேல் மண்ணுஞ் சுமந்து திருமேனியிலே அடியும் பட்டனையோ!” எனப் பலவாறு கூறித் தேம்பித் தேம்பியழுது புலம்பு வாரானார். அவரது ஆற்றாமையைக் கண்டும், கொற்றாளை யடித்த அடி எல்லார் முதுகிலும் பட்டமையும், ஓர் இமைப் பொழுதிற்குள் ஒரு கூடை மண்ணால் அப்பேருடைப்பினை அடைத்து அவன் மறைந்தமையும் நேரே பார்த்தும் பாண்டியனும் அவனோடு அங்குநின்றா ரெல்லாரும் கரைகடந்த வியப்பும் ஆற்றாமையு முடையராய் உள்ளங் கரையக் கண்ணீர் யாறாய் ஒழுக அழுது வருந்துவாரானார். இப்பெற்றித்தாக இறைவனைப் பிரிந்து ஆற்றா நேரத்தே, நஞ்சை நீராய் உருக்கும் ‘செத்திலாப்பத்து'ப் போன்ற சில பதிகங்களை அடிகள் அருளிச்செய்திருக்கலாமென்பது புலனாகின்றது. சிவபெருமான், தன்பாற் பேரன்பின

ளாகிய

மேல்

ஒரு பிட்டுவாணிச்சி, பொருட்டாகவே ஒரு

கொற்றாளாய்வந்து, பிட்டமுதுசெய்து, தன் திருமுடி மண்ணுஞ் சுமந்த அருட்டிறத்தை நேரே கண் டிருந்தமையாலன்றோ அடிகள்.

66

ஆங்கது தன்னில் அடியவட் காகப் பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்”1

என்றும்,

“திண்போர் விடையான் சிவபுரத்தார் போர்ஏறு மண்பான் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ’2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/135&oldid=1587581" இலிருந்து மீள்விக்கப்பட்டது