உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

107

முற்றவெடுத்துக் கூறுதலின், அதன்வழியே சென்று அதன்கட் பொருந்துவனவற்றை யெடுத்து ஒரு கோவைப்படுத்து அடிகளின் பின்வரலாற்றினை வரைகுவாம்;

மேற்சொல்லியவாறு

அடிகள்

மதுரைமாநகரை

விட்டகன்று திருப்பெருந்துறைக்கு மீண்டபோது, முன்னே அவரைக் குருவடிவில் வந்து ஆட்கொண்ட பெருமானுந் திருத் தொண்டர்களும் பின்னும் அங்கேயே எழுந்தருளியிருந் தனரெனத் திருவாதவூரர் புராணங் கூறும். முன்னே குருவடிவில் எழுந்தருளிய முதல்வன் திருவடிகளையாட்கொண்டு அவர்க்குச் செவியறிவுறுத் தருளியது ஐந்தெழுத்தாலாய ஒரு சொல்லின் முடிந்த வுண்மையேயாமென்பது.

“மன்ன என்னையோர் வார்த்தையுட்படுத்துப், பற்றினாய்”

என்று அடிகளே ஓதுமாற்றாற் பெறப்படுதலானும், அவ்வாறாட் காண்டருளியவுடனே அக்குரவன் தன்னடியார் குழாத் தொடும் மறைந்தருளினமை,

“தொண்ட னேற்குஉள்ள வாவந்து தோன்றினாய்

கண்டுங் கண்டிலேன் என்ன கண் மாயமே”2

என்று அடிகளே அருளிச்செய்யுமாற்றாற்

பெறப்படுத

லானும், அங்ஙனங் குரவன் மறைந்தவழி அடிகளைத் தனியே விடுத்துப் போயினானென்பது,

“அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும் நீயும்

அங்கெழுந் தருளி இங்குஎனை, இருத்தினாய் முறையோ'

993

என்பதனாற் றெளியக் கிடத்தலானும், குருந்தமர நீழலில் முன்னரொருகால் தம் குரவனைக் கண்ட அடிகள் பின்னர் அக் குருவடிவில் அவனை ஒருநாளுங் கண்டிலரென்பது,

“காணுமாறு காணேன் உன்னை அந்நாட் கண்டேனும்”4

4

என்னும் அடிகள் திருமொழியானே நன்குணரக் கிடத்த லானும் திருவாதவூரார் புராணக் கூற்று உண்மை நிகழ்ச்சி யொடு மாறுபடுகின்றமையின், அஃது ஏற்றுக்கொள்ளற் பாற்றன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/140&oldid=1587586" இலிருந்து மீள்விக்கப்பட்டது