உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

  • மறைமலையம் - 22

அஃது அங்ஙனமாயினும், அடிகள் மீண்டுந் திருப் பெருந்துறைக்குச் சென்றபின் தங்குரவன் எழுந்தருளித் தம்மை ஆட்கொண்ட குருந்தமரத்தைப் பிரியாராய், அதனருகிருந்து, தங்குரவனை நினைந்து நினைந்து ஆற்றாமைமிக்கு அழுதழுது திருச்சதகம் பாடியபடியாய்த், தங் குரவனது அருமைத் திருவுருவிற் றமது நினைவைப் பதித்துத் தம்மைத் தன்பால் இறைவன் வருவித்துக் கொள்ளுமாறு வேண்டியிருப்ப, ஒருநாள் இறைவன் அவர்க்குக் கனவிற் றோன்றி, ஆண்டுள்ள 'மொய்யார் தடம்பொய்கை'யைக் காட்டி "இதன்கண் ஒருநாள் தழல்வடிவிற்றோன்றி நினக்கும் நின்னைச் சூழ்ந்த அடியார்க்குங் காட்சி தந்தருளுவேம்; அப்போது நின்னைச் சூழ்ந்த அடியார் பலரும் அத் தழலின்கட் சென்று வீழ்ந்து மறைகுவர்; ஆனால், நீ மட்டும் அவ்வாறு அதன்கட் சென்று வீழற்க! அதனைக் கண்டுஇறைஞ்சிய பின்னர்த் திருவுத்தரகோசமங்கை சென்று ஆண்டும் அங்ஙனமே தோன்றும் தழல் வடிவைக் கண்டு தொழுது, அதன்பின் யாம் எழுந்தருளியிருக்குந் திருக் கோயில்கடோறுஞ் சென்று வணங்கித், திருக்கழுக்குன்றில் மீண்டுந் தோன்றும் அத்தழலுருவைக் கண்டிறைஞ்சிய பின்னர்த் தில்லைச்சிற்றம்பலம் போதுக! எனக் கட்டளை யிட்டு மறைத்தருளினன். அதன்பிற் சில நாட்கள் காறும் அடிகள் அக் கட்டளைப்படியே ஆங்குத் தவத்திலிருந்து, அதன் நிறைவேற்றத்தை எதிர்பார்த்திருக்கையில், ஒருநாள் அப் பொய்கையினூடே சொல்லற்கு அரிய பேரொளியோடும் ஓர் அனற்பிழம்பு கிளர்ந்து தோன்றி ஒளிர, அதனைக் கண்ட அடிகளை யுள்ளிட்ட அடியார் குழாத்துட் பலர் அதன்கட் சென்று வீழ்ந்து மறைந்தனர். எஞ்சி நின்ற அடிகளும் மற்றுஞ் சிலரும் அத் தழற் பிழம்பைக் கண்டு தொழுதுருகினர். தமக்கு வெளிப்பட்டு அருளல் வேண்டுமெனக் குறையிரந்த அடிகட்கு இரங்கி இறைவன் அழல் வடிவிற்றோன்றினமை,

என்று

“எமக்கு வெளிப்படா யென்ன வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்”

அடிகளே

995

அருளிச்செய்தவாற்றால்

தெளியப்

படும். இனி, அடிகள் மட்டும் எஞ்சி நின்றமையும் ஏனை அடியவர்களெல்லாரும் அத் தழலிற் புகுந்து மறைந்து இறைவன் திருவடி சேர்ந்த குறிப்பும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/141&oldid=1587587" இலிருந்து மீள்விக்கப்பட்டது