66
- மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
'விச்சுக்கேடு பொய்க்காகாதென்று
இங்கு எனைவைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார்"6
எனவும்,
66
“அடியேன் அல்லேன் கொல்லோதான் எனை ஆட் கொண்டிலை கொல்லோ அடியாரானார் எல்லாரும் வந்துன் தாள்சேர்ந்தார்”
6
எனவும்,
எனவும்,
"சிவமாநகர் குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே"
“பேரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான்
எனவும்.
―
1
109
“அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல்சேர்ந்த மெழுகே யன்னார் மின்னார் பொன்னார் கழல்கண்டு தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதே பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே
எனவும் அடிகளே ஓதுமாற்றால் உணரப்படும்.
இனி, மொய்யார் தடம் பொய்கையிற் கிளர்ந்து தோன்றிய இறைவனது தழல்வடிவை அடிகள் கண்டு மெழுகாயுருகித் தொழுத பின்னர்த், தன்கட்புக்க அடியா ரோடும் அவ்வனற்பிழம்பு மறைந்தது. இறைவன் தமக்கிட் கட்டளையை நினைந்து அடிகள் குருந்தமரத்தின் அடியைப் பலகாலும் வீழ்ந்திறைஞ்சி ஆற்றாமையோடும் அதனைப் பிரிந்து, திருப்பெருந்துறையை விட்டுப் புறப்பட்டுத்,