உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மறைமலையம் 22

திருவுத்தரகோசமங்கையைச் சென்று சேர்ந்தார். அங்கே அடிகள் சின்னாள் இருந்து தவம் இயற்ற, ஆங்குள்ளதொரு குளத்தில் மறித்துந் தழல்வடிவு கிளர்ந்து தோன்றி விளங்க லாயிற்று. இவ்வாறு அங்குத் தோன்றிய தழல்வடிவினையே,

“தெங்குலவு சோலைத் திருவுத்தரகோச மங்கை தங்குலவு சோதித் தனியுருவும் வந்தருளி எங்கள் பிறப்பறுத் திட்டு”7

என்று அடிகளும் ஓதியருளினார். உத்தரகோசமங்கையில் அடிகள் தவத்திலிருந்த காலத்து இறைவன் தமக்கு வெளிப்படுதலை வேண்டிக் குறையிரந்து பாடியது ‘நீத்தல் ண்ணப்பம்' என்னும் செய்யுட்டொகுதியே யாதல், அதன்கண் முதல் இருபது பாட்டுக்களில் உத்தரகோசமங்கை எடுத்துக் கூறப்பட்டிருப்பதே சான்றாம். இனி, ஆண்டு இறைவன் தழலுருவிற் றோன்றி அவர்க்குக் காட்சி தந்து அருளியபின்,

அடிகள் பாடியது 'திருப்பொன்னூசல்' என்பதூஉம்

அறியற்பாற்று. இத், 'திருபபொன் னூசல்' தில்லையில் அருளிச் செய்யப்பட்ட தென்று எவரோ வரைந்து வைத்தது சிறிதும் பொருந்தாது; என்னை? அத் திருப்பொன்னூசல் ஒன்பது செய்யுட்களிலும் திருவுத்தரகோச மங்கையே விதந் தெடுத்து வைத்துப் பாடப்படுதலின் என்க. அடிகள் திருவுத்தரகோச மங்கையிற் றோன்றிய தழற்பிழம்பைக் கண்டு தொழுதபின்னர், அங்கே தமது தவம் நிறைவேறப் பெற்றார்.

இறைவன் தமக்குப் பணித்தருளியவாறே திருவுத்

தரகோச மங்கையை விட்டகன்று, பாண்டிநாட்டிலுள்ள திருக்கோயில்கள் பலவற்றிற்குஞ் சென்று ஆண்டாண்டு இறைவனை வணங்கிக் கொண்டு, பின் சோழநாட்டின் கண்ணதான திருவாரூரை அடைந்து சிவபிரானைத் தொழுது 'திருத்தெள்ளேணத்'தில் முதற் பத்துப்பாட்டும், 'திரும்புலம் பலில்' முதற் பாட்டும் பாடியருளினார். இங்கே திருவாதவூரர் புராணக் கூற்று மாறுபடுகின்றது. பாண்டிநாட்டை விட்டு அகன்றபின் அடிகள் முதலிற் சோழ நாட்டில் திருவிடை மருதூரை அடைந்தார் எனவும், அதற்பிற் றிருவாரூரை அடைந்து ஆண்டுத் 'திருப்புலம்பல்' முற்றும் ஓதினார் எனவும் அப் புராணங் கூறா நின்றது. மற்று மதுரையைவிட்டு வடக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/143&oldid=1587589" இலிருந்து மீள்விக்கப்பட்டது