உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

111

மூன்று

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நோக்கிச் சோழ நாட்டுத் திருக்கோயில்கட்குச் செல்வார் முதலிற் றிரு வாரூரை யடைந்தே, அதன்பின் அதற்கும் வடக்கேயுள்ள திருவிடை மருதூர் செல்ல வேண்டுதலின் அப் புராணத்திற் கூறிய முறை பொருந்தாதென்றுணர்ந்து காள்க. அதுவேயுமன்றித், திருப்புலம்பல்' பாட்டுக்களில் முதற்பாட் டொன்றுமே திருவாரூர் மேலதாய்ப் பாடப்பட்டிருப்ப தல்லாமல், இரண்டாம் பாட்டுத் திருப்பெருந்துறை மேலும் மூன்றாம் பாட்டுத் திருக்குற்றாலத்தின் மேலும் பாடப்பட்டிருத்தலின் இவை மூன்றும் ஒரு காலத்தே ஒருங்கே திருவாரூரில் அருளிச் செய்யப்பட்டன வென்றால் பொருத்தமில் உரையாம்.

ஒவ்வொரு திருக்கோயிலில் ஒவ்வொருகால் ஒன்றுஞ் சிலவும் பலவுமாய் அடிகளாற் பாடப்பட்ட பாட்டுக்களே பின்னுள்ளோரால் தமக்குத் தோன்றியவாறு தொகுத்தும் வகுத்தும் வைக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் நுண்ணிய ஆராய்ச்சியுடையார்க்கன்றி ஏனையோர்க்கு ஒரு சிறிதும் விளங்கா. திருத்தெள்ளேணத்தில் பிற பத்துப் பாட்டுக்கள் சிலவற்றில் தில்லையம்பலங் கூறப்பட்டிருத்தலின் அவை பத்தும் ஆண்டுச் செய்யப்பட்டன வென்பது பெறுதும்; முதற்பத்தின் இரண்டாஞ் செய்யுளில் திருவாரூர் கூறப்பட் டிருத்தலின் அவை பத்தும் ஆண்டுச் செய்யப்பட்டனவென்பது பெறுதும்; அற்றாயின், அவ்வத்திருக்கோயிற் பெயர் மட்டும் உடைய செய்யுட்கள் மட்டுமே ஆண்டாண்டுச் செய்யப் பட்டன, ஏனைய அல்லவெனக் கொள்ளாமோவெனிற்; கொள்ளலாம். ஒரு திருக்கோயிலைப் பாடுங்கால் அதன்மேற் பெரும்பாலும் பத்துச் செய்யுட்கள் இயற்றுதல் தொல்லாசிரியர் முறையாய்ப் போதலின், திருவாரூர்ப் பெயர் சொல்லிய செய்யுள் ஒன்றாயிருப்பினும் அதனோடியைந்த ஏனை ஒன்பது திருத்தெள்ளேணச் செய்யுட்களும் அக்கோயிலின் மேலனவாகவே இயற்றப்பட்டனவாகு மெனக் கோடல் இழுக்காது.

இங்ஙனமே அதன் பிற்பத்துச் செய்யுட்களும் தில்லை யம்பலத்தின் மேலவாதல் கொள்ளப்படும் இனித், 'திருவேசறவு' ஒன்பதாஞ் செய்யுளில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/144&oldid=1587590" இலிருந்து மீள்விக்கப்பட்டது