உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

66

மறைமலையம் 22

'அருள் எனக்கு இங்கு இடைமருதே இடங்கொண்ட அம்மானே."

என்று திருவிடைமருதூர் கூறப்பட்டிருததலின் அச் செய்யுட்கள் பத்தும் அங்கே அருளிச்செய்யப்பட்டமை பெறப்படும்; அற்றேல் அதன் ஏழாஞ் செய்யுளில்,

“தென்பாலைத் திருப்பெருந்துறை யுறையுஞ் சிவபெருமான்.

என்றுரைக்கப்பட்ட தென்னையெனின்; தமக்கு இறைவன் ஆண்டுக் குருவடியில் எழுந்தருளி அருள்செய்ததனை நினைந் துரைத்த அத்துணையே யல்லது, "இங்கு இடைமருதே இடங்கொண்ட அம்மானே" என்னும் அதன் ஒன்பதாஞ் செய்யுளிற் போலக் கூறாமையின், அப்பதிகம் திருப்பெருந் துறையிற் செய்ததாகாதென் றுணர்ந்து கொள்க. இனி, அடிகள் திருவிடைமருதூரை விட்டகன்று திருக்கழுமலம்' என்னும் சீர்காழியை அடைந்து ஆண்டு இறைவனை வணங்கினார். இவ்விடத்தே 'பிடித்தபத்து பிடித்தபத்து' அருளிச்செய்தார் என்ற திருவாதவூரர் புராணங் கூறும். ஆனால், அப் பிடித்தபத்துப் பாட்டுக்களில் எங்குஞ் சீர்காழியைப் பற்றிய குறிப்பு ஏதுங் காணப்படாமையால் அவை அங்கே தான் இயற்றப்பட்டன வென்று துணிந்து கூறல் இயலாததாயிருக்கின்றது. சிலநாட் சீர்காழியில் வைகி, அதன்பின் தில்லையம்பலம் இருக்கும் மூலைநோக்கி வணங்கிக்கொண்டு, தமக்கு இறைவன் பணித்தவாறே அடிகள் 'திருக்கழுக்குன்றஞ்’ செல்லும்வழி மேற்கொள்வாரானார். அவ் வழியினிடையே ‘திருமுதுகுன்றம்,' 'திருவெண்ணெய் நல்லூர்’ என்னுந் திருப்பதிகளையுஞ் சென்று

அடிகள் வணங்கினாரெனத் திருவாதவூரர் புராணங்

கூறுமேனும், அக் கோயில்களின் பெயரேனும் குறிப்பேனும் திருவாசகந் திருக்கோவையாரில் எங்குங் காணப்படாமையின் அவ்வுரை கொள்ளற்பாலதன்றென்க.

சல்லும்

மற்றுத் திருக்கழுக்குன்றம் நோக்கிச் அவ்வழியினிடையே அடிகள் 'திருவண்ணாமலை' சென்று, அங்கே இறைவனை வணங்கியுறையும் நாட்களில், மார்கழித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/145&oldid=1587591" இலிருந்து மீள்விக்கப்பட்டது