உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

――

1

113

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் திங்கள் வந்தது. அங்கே சிவபிரான் கோயிலிற் றிருத்தொண்டு செய்யும் மாதர்கள் அத்திங்களின் புலரிக்காலையிலே துயில் நீங்கியெழுந்து, அங்ஙனம் முன் எழாது இன்னுந் துயிலிலிருக்குந் தம்மினத்தவரில் மற்றையரை அவர் கூறுமாறாகச் சிவ பிரான்றன் அருட்டிறங்களைப் பாட விழைந்து, அவரையுந், தம்மோடுடன் போந்த தம் மனைவியார் அவர்க்குப் பாங் காயினார் முதலியோரையும் முன்னிலைப்படுத்தித் ‘திருவெம் பாவை' அருளிச் செய்தார். இஃது இத் திருக்கோயி லின்மேல் அருளிச் செய்யப்பட்ட தென்பதற்கு, இதன் பதினெட்டாஞ் செய்யுளில் “அண்ணாமலையான் அடிக்கமலம்" என்று போந்த குறிப்பே சான்றாம். இஃது அக் கோயிற் றிருத்தொண்டு புரியும்' மாதரை நோக்கிச் சொல்லப்பட்டமைக்கு அதன் பத்தாஞ் செய்யுளிற் "கோதில் குலத்தான்றன் கோயிற் பிணாப் பிள்ளைகாள் என்று அவர்களை விளித்து அடிகளே அருளிச்செய்தமையே சான்றாம். இனி, அதன் பதினைந்தாம்

செய்யுளில்,

""

“ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாய்ஓவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்' பேரரையர்க்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறு'

என்று அடிகள் ஓதுதலை உய்த்து நோக்குங்கால், அவர் இதன்கட்டம் மனைவியார் சிவபிரான்மாட்டு வைத்த பேரன்பின் றிறத்தை வியந்து பாடினாரென்றல் இழுக்காது. இதனோடு, ஆண்டுக்கோயிலிற் றொண்டு புரியும் அந் நங்கைமார் விளையாடிய அம்மானை விளையாட்டைக் கண்டு, அதனாலும் அவர்கள் சிவபிரான் அருட்டிறங்களில் நினைவைப் பதித்துப் பேரின்பத்திற் படிதல் வேண்டித், 'திருவம்மானை' இருபது செய்யுட்களும் அருளிச்செய்தார். இத் திருவம்மானை அண்ணா மலைக் கண்ணேதான் அருளிச் செய்யப்பட்ட தென்பது, அதன் பத்தாஞ் செய்யுளில் “அண்ணாமலையானைப் பாடுதுங் காண் அம்மானாய்,” என்று அடிகளே கூறியவாற்றாள் போதரும். இனி, அடிகள் திருவண்ணாமலைக்கு எழுந்தருளியதும் மார்கழித் திங்கள் வந்ததென்பதால், அவர் ஆவணித் திங்கள் மூலநாளுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/146&oldid=1587592" இலிருந்து மீள்விக்கப்பட்டது