உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

  • மறைமலையம் - 22

பின் மதுரையை விட்டகன்று சிறிதேறக்குறைய மூன்று திங்கள் வரையில் இடையிடையேயுள்ள திருக்கோயில்கட்குச் சென்று ஆ ண்ட ாண்டு இறைவனை வழிபட்டு வந்தாரென்பது பெறப்படும் என்க.

இனி, அடிகள் திருவண்ணாமலையை விட்டகன்று திருக்கச்சியேகம்பம் சேர்ந்து, ஆண்டு அம்மை தழுவக் குழைந்த பெருமானை யேத்தி, அங்கே ‘உந்தி' என்னும் விளையாட்டைப் புரியும் மகளிரைக் கண்டு அவர்கூறும் பரிசாகத் ‘திருவுந்தி யார்' அருளிச்செய்தார். இஃது அங்கே அருளிச்செய்யப்பட்ட தென்பதற்கு,

“ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்'

என்று அதன் இரண்டாஞ் செய்யுளில் ‘ஏகம்பர்' என்னும் பெயர் கூறப்பட்டிருத்தலே சான்றாம். இத் திருவுந்தியார் தில்லையில் அருளிச் செய்யப்பட்டதென்று உரைப்பதற்குச் சான்று அப்பாட்டுக்களில் எங்குங் கண்டிலம். அற்றேல், 'திருப்பொற் சுண்ணம்' நான்காம் பாட்டிற் “கச்சித் திருவேகம்பன் செம்பொற் கோயில் பாடி” என்று இத் திருக்கோயில் குறிக்கப்பட்டிருத்த லானும், அங்ஙனமே ‘திருப்பூவல்லி' பதினான்காம் பாட்டில் “ஏகம்பம் மேயபிரான்” என்று இத் திருக்கோயிலில் ஏழுந்தருளியிருக்குஞ் சிவபிரான் பெயர் கூறப்பட்டிருத்தலானும் அவையிரண்டுங் கச்சியேகம்பத்திலேதான் அருளிச் செய்யப் பட்டனவென்று கொள்ளாமோ வெனின்; திருப்பொற்சுண்ணம் முதற்பாட்டில், “அத்தன் ஐயாறன்” என்னுந் திருவையாற்றுப் பெருமான் பெயரும், அதன் ஒன்பதாம் பாட்டில்

66

‘அணிதில்லை வாணனுக்கே”

எனவும், பதினோராம் பாட்டில்,

“அம்பலத் தாடி னானுக்கும்”

எனவும், பத்தொன்பதாம் பாட்டில்,

“தில்லைபாடிச் சிற்றம்பலத் தெங்கள் செல்வம் பாடி

எனவுந் தில்லைப்பெருமான் பெயரும் போதரக் காண்டலின், பரும்பான்மைபற்றித் திருப்பொற்சுண்ணம் தில்லையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/147&oldid=1587593" இலிருந்து மீள்விக்கப்பட்டது