உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

――

18

115

அருளிச் செய்யப்பட்டதென்றும், அங்ஙனமே திருப்பூவல்லி முதற்பாட்டு இரண்டாம் பாட்டு ஏழாம்பாட்டுப் பதினான்காம் பாட்டுக்களில் தில்லைம்பலமும் தில்லைப் பதிக்கரசுங் கூறப்பட்டிருத்தலின் அத் திருப்பூவல்லியும் அவ்வாறே தில்லையில் அருளிச்செய்யப்பட்ட தென்றுங் கொள்ளுதலே பொருத்தமாம் என்க.

அதன்பின், அடிகள் திருக்கச்சியேகம்பத்தினின்றும் நீங்கித் ‘திருக்கழுக்குன்றம்' வந்து இறைவனைத் தொழுது தவத்தில் வைகினார். அவ்வாறிருக்குநாளில் அவர்க்கு முன்னே சிவபிரான் தனது அருள்ஒளி வடிவினைக் காட்ட, அடிகள் அதனைக் கண்டு பேரின்ப வெள்ளத்து அழுந்தினராய்ப் “பிணைக்கிலாத" என்பதனை முதலாக உடைய திருக்கழுக் குன்றப் பதிகச் செய்யுட்கள் ஏழும் அருளிச் செய்தனர். அச் செய்யுள் ஒவ்வொன்றன் ஈற்றிலும் இறைவன் தனது திருக்கோலத்தைத் தமக்குக் காட்டியபடியை அடிகளே அருளிச்செய்திருத்தல் காண்க. ஈண்டு அடிகள் கண்ட கோலம் அனற்பிழம்பு வடிவே என்பது “எமக்கு வெளிப்படா யென்ன வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்” என்று அவர் தாமே அருட்பத்தில் ஓதுமாறுபற்றித் துணியப்படும். அவ் வடிவிலன்றித், திருப்பெருந்துறையில் முதற்கட்போந்த குருவடிவிலேயே ஈண்டும் இறைவன் அவர்க்குக் காட்சி தந்தருளினானென்று கொள்ளாமோ வெனிற், கொள்ளாம்; என்னை? முதற்கட் குருவடிவிற் போந்து தம்மை அடிமை கொண்ட ஐயனது அவ் வுருவத்தையே ஈண்டுங் கண்டனராயின் அதன்பால் அன்புமீதூரப்பெற்ற அவர் அத்திருவுருவத்தின் இயல்பை இப் பதிகத்திற் கிளந்தெடுத்துக் கூறாது இரார் ஆகலின் என்க.

பின்னர் அடிகள் திருக்கழுக்குன்றத்தை ஆற்றாமை யோடும் விட்டகன்ற, இறைவன் பணித்த கட்டளைப் படியே தில்லை மூதூர் வந்து சேர்ந்தார். அங்கே திருச் சிற்றம்பலத்தில் டை யறாது திருக்கூத்தியற்றும் சிவ பிரான்றன் ன்பவுருவினைக் கண்டு கண்ணீர்வார மெய்ம்மயிர் பொடிப்பப் பெருங் களிப்புற்று "இந்திரிய வயமயங்கி” என்பதனை முதலாக உடைய ‘கண்டபத்து' அருளிச் செய்தார். அதன்பிற் பொன்னம்பலத்தை வலங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/148&oldid=1587594" இலிருந்து மீள்விக்கப்பட்டது