உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

1✰

141

பேரின்

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் விளங்கச் செய்து, அவரைத் தனது திருவருட் பத்தில் அடக்கிக் கொள்வன். இதுவே வீடுபேறாம்; இப்பேற்றை எய்தினார்க்கு மீளப் பிறவி உண்டாகாது, எஞ்ஞான்றும் ஒரு பெற்றித்தாம் அழியாப் பேரின்பமே உளதாம். இப்பெற்றித்தாம் பேரின்பம் இறைவன்மாட்டன்றி வேறெங்கும் இன்மையானும், வரம்பிலறிவு வரம்பிலாற்றல் முதலாக இறைவற்குரிய ஏனை இலக்கணங்களெல்லாவற்றினும் வரம்பிலின்பமுடைமை யாகிய ஈதொன்றுமே இறைவற்குச் சிறப்பிலக்கண மாகலானும், துன்பத்திற் கிடந்துழலும் உயிர்கள் ஏனை நினைவுகளை யெல்லாம் விட்டு விட்டு அவற்குரிய அவ் வின்பவுருவினை இடையறாது நினைவு கூரக்கூர அவ்வுயிர்கள் அவன்றன் இன்பவுருவினை எய்துமாகலானும், அவ் வின்பவுருவினை அவ் வுயிர்கட்கு நினைவில் ஏற்றுதற்கண் இறைவற்குரிய ஏனை இலக்கணங்களை யுணர்த்தும் ஏனைப் பெயர்களெல்லா வற்றிலும் ‘அன்பு' 'இன்பம்' எனப் பொருடந்து அவன்றன் இன்ப வுருவினை மட்டும் நினைவுறுத்தும் 'சிவம்' என்னுஞ் சொல்லே கழிபெருஞ் சிறப்பிற்றாய் நிலையுதலானும் எல்லாம்வல்ல இறைவற்குச் 'சிவம்' என்னும் அப்பெயரே பெயராக எம் முன்னோராற் றொன்றுதொட்டு வழங்கப்பட்டு வரலாயிற்றென் றுணர்ந்து கொள்க.’

வல்வினையேன் றன்னை, மறைந்திட மூடிய மாயஇருளை.

(சிவபுராணம், 50, 51)

(திருப்பாண்டிப் பதிகம், 8)

‘கழிவில் கருணையைக் காட்டிக் கடியவினை யகற்றிப்

பழமலம் பற்றறுத் தாண்டவன்.

கறங்கோலை போல்வதோர்

காயப்பிறப்போடு இறப்பென்னும்

அறம்பாவ மென்றிரண் டச்சந்

தவிர்த்தென்னை யாண்டுகொண்டான்,' (திருத்தெள்ளேணம், 8)

‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கலலாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/174&oldid=1587621" இலிருந்து மீள்விக்கப்பட்டது