உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

ஊறிநின்று என்னுள் எழுபரஞ் சோதி

உள்ளவா காணவந் தருளாய்

தேறலின் தெளிவே சிவபெரு மானே

திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே.’

1

143

(கோயிற்றிருப்பதிகம், 1)

இனி, யாம் வழிபடும் இன்பவுருவிற்றான சிவம் முழு முதற்கடவுளே யன்றிப் பிறிது அன்று என்பதற்குப் பிறவாமை, இறவாமை, என்றும் ஒரு பெற்றித்தாய் நிற்கும் பேரின்பநிலை, முதலாக எம் முன்னோர் பண்டுதொட்டு வழங்கிவரும் கடவுளிலக்கணங்கள் எம் மிறைவனாகிய சிவபிரான்மாட்டு எஞ்ஞான்றும் பிறழா இயல்பினவாய்க் காணப்படுதலின், அவன் புராணங்களிற் கூறப்படும் நான்முகன் மால் காலவுருத்திரன் என்னும் மூவரில் ஒருவன் அல்லன்; ஆரிய வேதங்களிற் கூறப்படும் இந்திரன் வருணன் மித்திரன் சீகண்ட வுருத்திரன் முதலான தேவர்களுள்ளும் ஒருவன் அல்லன்; இத்தேவர்க ளெல்லாரும் பிறப்பும் இறப்பும் துன்பமும் உடையரென அந்நூல்களிலேயே சொல்லப்படுதலின் அவருள் எவரும் முழுமுதற்கடவுளாகிய சிவம் ஆகார். மும்மல வயப்பட்ட சிற்றயிர்களாகிய அவரெல்லாந் தவத்தால் எம்மிறைவனருளைப் பெற்றுத் தேவராயினர். அதனால், எம் முன்னோரும் யாமும் எம்மனோரும் அச்சிவமாகிய முழுமுதற் கடவுளையன்றி வேறொன்றனைத் தெய்வமாகக் கனவிலும் நினையேம். இன்னும், இவ் வின்பவுரு விற்றாகிய சிவம் எல்லா வுயிர்கட்குந் தனது பேரின்பத்தை ஊட்டல் வேண்டியும், தலைவனாகிய தன்னையும் உயிர்களாகிய தம் மியல்பையும் உணராமற் சிற்றுயிர்களெல்லாம் அறியாமையாற் கவரப்பட் டிருத்தலின் அவை தமக்கு அவ்வறியாமையை நீக்கி அறிவுச் சுடர் கொளுத்தல் வேண்டியும் பிறவிகடோறும் அவற்றிற்கு மிக வியத்தக்க அமைப்போடு கூடிய பலவே றுடம்புகளை அமைத்துக் கொடுத்து வருகின்றான். ஒவ்வோர் உயிரும் தன் றனக்கு வரையறுக்கப்பட்ட காலம் வரையில் தன்றன் உடம்பி லிருந்து அறிவு விளங்கல் வேண்டுமாகலின், அவ்வுயிர்களின் உடம்பை உணவின்பொருட்டுச் சிதைத்தலும் சிதைப்பித்தலும் அவன் கருத்துக்கு முற்றும் மாறாய், இரக்க மில்லாக் கொடுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/176&oldid=1587623" இலிருந்து மீள்விக்கப்பட்டது