உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் 22

தீவினை யாகும். ஆகவே, எல்லா எல்லா வுயிர்களும் தத்தம் உடம்புகளில் இருந்து உயிர்வாழ்தற்கு ஏற்ற உதவிகளை எம்மாலியன்ற வரையிற் செய்யக் கடமைப்பட்டிருக்கின்றோம். எவ்வுயிரையுங் கொல்லாமையும், கொன்று அதன் ஊனைத் தின்னாமையும் ஆகிய அருளொழுக்கம், எவ்வுயிர்க்கும் இன்பத்தைச் செய்யும் சிவபிரானை வழிபடுஞ் சைவராகிய எமக்கே உரிய சிறந்த அறமாமெனத் தேறுமின்! இனி உயிர் என்பதுங் கடவுள் என்பதும் இல்லையென்னும் நுமது கொள்கையும், எவ்வுயிரையுங் கொல்லல் ஆகாது என்னும் நுமது அறிவுரையும், ஆயினும் பிறராற் கொன்று சமைக்கப் பட்ட ஓர் உயிரின் ஊனைத் தின்னும் நுமது செய்கையும் ஒன்றோடொன்று மாறுபடுதலின், அருளொழுக்கத்திற்கு முரணான நுமது புத்தசமயம் முற்றும் பொய்யாமென்று தெளிந்துகொள்ளக் கடவீராக!”

'யாவர்க்குந் தந்தைதாய் தம்பிரான்

தனக்கு அஃது இலான்

(திருச்சதகம், 47)

‘தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ'

(திருச்சாழல், 3)

'துன்பம் பிறப்பே இறப்பொடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்த நற்சோதீ

இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்’

(பிடித்தபத்து, 10)

‘அட்டமூர்த்தி அழகன்

இன்னமுதாய ஆனந்த வெள்ளத்தான்

மண்மிசை மால்பலர் மாண்டனர்காண்'

(சென்னிப்பத்து,2)

'எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்

(திருத்தோணோக்கம், 9)

'செழும் பொழில்கள் பயந்துகாத்து அழிக்கும் மற்றை

மூவர் கோனாய்நின்ற முதல்வன்'

(திருச்சதகம், 30)

முன்னானை மூவர்க்கும் முற்றுமாய்

முற்றுக்கும் பின்னானை

'பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த

நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்

(திருவம்மானை, 19)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/177&oldid=1587624" இலிருந்து மீள்விக்கப்பட்டது