உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

ஒரு

மறைமலையம்

22

1

உரையாசிரியர் எவரும் மேற்கோளாக எடாதது கொண்டே கல்லாடநூலை அவர்க்குப்பின் வைத்தல் ஆகா தெனக் கூறும் நீவிரே; அப்பர் சம்பந்தர் சுந்தரரைக் குறிப்பிடாமை கொண்டே அந்நூலை அவர்க்கு முன்வைத்தல் வேண்டுமென வுரைத்தல் முன்னொடுபின் முரணாமன்றோ வெனின்; அவ் வியல்பினை சிறிது விளக்குதும்; இன்மையேது' எவ்விடத்து வலிவுடையது, எவ்விடத்து வலிவில்லது எனப் பகுத்தாராய்ந்து வலிவுடைய விடத்து அதனை ஒரு பற்றுக்கோடாகக் கொண்டு ஒரு முடிபுக்கு வருதல் வேண்டும். உரையாசிரியர்கள் பண்டைக் காலத்து இலக்கண இலக்கியங்களையே மேற்கோளாகக் கொண்டு உரை யெழுதுங் கடப்பாடு உடையர் என்பது. தமக்கு முற்பட்ட டைக் காலத்திலக்கியங்கள் பலவற்றிலிருந்து மேற்கோள் எடாமையால் நன்கு பெறப்படுதலின், அவர்கள் கல்லாடத் தினின்று மேற்கோள் காட்டாமைபற்றி அதனை அவர்கட்குப் பின்னெழுந்த தென்றல் சாலாது; அதனால், இவ்விடத்து 'இன்மையேது வலிவுகுன்றி நிற்கின்றது. மற்றுக் கல்லாடம் இயற்றிய ஆசிரியர் ஆ சிவபிரான்மாட்டும்

அவனடியார் மாட்டும் பேரன்புடையரென்பது அவரருளிச் செய்த பாக்களால் நன்கு தெளியக்கிடத்தலின், அவர் அப்பர் சம்பந்தர் சுந்தரர் இயற்றிய அரும்பெருஞ் செயல்களை எடுத்து ஓதாமைக்கு ஓர் ஏது வேண்டுமன்றே; அவர் அங்ஙனம் அவர்களை ஓதாதுவிட்ட மைக்கு வேறோர் ஏது வேறு ஒருவாற்றானும் பெறப்படா மையின், ஈண்டு 'இன்மையேது’ மிகவும் வலிவு பெற்று நின்று கல்லாட நூலாசிரியர் அப்பர் சம்பந்தர் சுந்தரர் என்னும் மூவர்க்கும் முற்பட்ட காலத்திருந்தா ராதலைப் பெறுவிக்கும்; இங்ஙனமாக இன்மையேது' வின்வலிவறிந்து முடிவுகாண வல்லார்க்கு யாங்கூறியது முன்னொடுபின் முரணாமை நன்குவிளங்கா நிற்குமென்க.

அஃதொக்குமாயினும், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தவ ரான சேரமான் பெருமாள் நாயனார்க்குப் பாணபத்திரர் வழியே சிவபிரான் ‘திருமுகப்பாசுரம்' எழுதிவிட்ட வரலாறு ஒன்று கல்லாடநூலின் 15ஆம் செய்யுளிற் காணப்படுதலின், அதனைக் குறிப்பிட்ட அந் நூலாசிரியர் சுந்தரமூர்த்திகட்குப் பிற்பட்டவ ரென்பது பெறப்படுமென எதிர்ப்பக்கத்தவர் கூறினாரா லெனின்; அது பொருந்தாது; அம்மண் மதம் புகுந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/255&oldid=1587702" இலிருந்து மீள்விக்கப்பட்டது