உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

――

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1

1✰

223

இறைவன் தந்த வயிற்றுவலியால் அறிவு தேறிச் சைவசமயந் தழீ இச் “சொற்றுணை வேதியன்” என்னுந் திருப்பதிகம் ஓதித் தம்மை சமணர் கட்டி வீழ்த்திய கல்லையே புணையாகக் கொண்டு கடலைக் கடந்து கரையேறி இறைவனருளாற் பல செயற்கருஞ் செயல்களெல்லாஞ் செய்து, திருக்கோயில் கடோறுஞ் சென்று செந்தமிழ் வளமும் அன்பின் பெருக்குந் துளும்புந் திருப்பதிகங்கள் கட்டளையிட்டுத் திருவருளில் L மறைந்த அப்பரையும், மூன்றாம் ஆண்டு செல்கின்ற இளங்குழந்தையா யிருந்துழியே இறைவனையும் இறைவியை யுங் கண்ணெதிரே கண்டு அவர் தந்த அருட்பாலை யுண்டு அருந்தமிழ் பாடிச், சமணர் இட்ட தீக்குத் தம்மையுந் தம்மடியரையுந் தப்புவித்துப், பாண்டியன் வெப்புநோய் தீர்த்தும், தீயில் இட்டெடுத்த பச்சேட்டானும் வைகை நீரின் எதிரேறிச் செல்லவிடுத்த திருப்பதிகவேட்டானும் முழுமுதற் கடவுளின் திருவருட்டுணையை உலகறிய நாட்டியும் திகழ்ந்த திருஞானசம்பந்தப் பிள்ளையாரையும், எல்லாருங் காணத் திருமணப்பந்தலிலே இறைவனே ஓர் அந்தணவடிவிற் றோன்றி ஆவணங்காட்டி மணத்தைத் தடுத்து ஈர்த்துச் சென்று திருவெண்ணெய் நல்லூரில் தம்மை ஆட்கொண்டு மறையும் பெரும்பேற்றினைப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனாரையும் குறிப்பியாது. காரைக்கால் அம்மையாரையும் மூர்த்தியாரையும் பிட்டு வாணிச்சியையும் திருவாதவூரர் பொருட்டு நிகழ்ந்த கரிபரித் திருவிளை யாடலையும், இவை போன்ற வேறு சில பழையவற்றையும் மட்டும், சிவநேயம் சிவனடியார் நேயம் மிக்க கல்லாட நூலாசிரியர் குறிப்பிட்டது து என்னையென்று அமைதியோடு ஆராய்ந்து காணமாட்டுவார்க்கு, அக் கல்லாட நூலாசிரியர் சுட்டிய 'சேரலன்' சுந்தரமூர்த்திகள் காலத்தவன் அல்லன் என்னும் உண்மை உரம்பெற்று விளங்கித் தோன்றும்.

அற்றேற், பெரும்பற்றப்புலியூர் நம்பியார் திருவிளை யாடலும் பெரியபுராணமும் பாணபத்திரர் இறைவன்றந்த திருமுகங்கொண்டு சென்றது சேரமான் பெருமாளிடத்தே யாமென்று கூறிய தென்னையெனின்; நம்பியார் திருவிளை யாடல் அச் சேரமன்னனைச் சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தவன் என்று யாண்டும் ஓதுகின்றிலது அத் திருமுகப் பாசுரத்திலும் “செருமா உகைக்குஞ் சேரலன் காண்க

’”2 என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/256&oldid=1587703" இலிருந்து மீள்விக்கப்பட்டது