உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

225

சால்லொப்புமைபற்றி அவ் விரண்டு சேரமன்னரும் ஒருவரேயெனத் துணிதல் சிறிதும் பொருந்தாதென்க.

அற்றாயினும், முன்னர் எடுத்துக்காட்டிய கல்லாடச் செய்யுட் பகுதியிற் "பரிபுரக்கம்பலை இருசெவி யுண்ணுங், குடக்கோச் சேரன்” என அச் சேரமன்னற்கு அடைமொழி யாய்ப் போந்த சொற்றொடரே, நாடோறும் இறைவற்கு வழிபாடாற்றுங் காலங்களிலெல்லாம் இறைவன் இயற்றுந் திருக்கூத்தினால் ஒலிக்கும் இறைவன் காற்சிலம்பொலியினைக் கேட்டவர் சேரமான்பெருமாளேயன்றி வேறு பிறர் அல்லர் என்பதனைக் காட்டும். இதற்குப் பெரியபுராணத்தின்கட் காணப்படும் அவர் வரலாறும் சான்றாயிருத்திலின், கல்லாடச் செய்யுளிற் குறிப்பிடப்பட்ட சேரமன்னர் சுந்தரமூர்த்தி நாயனாரின் தோழரான சேரமான் பெருமாளே யாவரெனின் அதுவும் பொருந்தாது. பெரியபுராணத்தின்கட் கூறப்பட்ட வரலாறுகள் அதற்கு முற்பட்ட நூல்களிற் காணப்படாமை யோடு அவற்றொடு மாறு கொண்டும் நிற்குமாயின் அவை கொள்ளற்பாலன அல்ல. சேரமான் பெருமாள் நாடோறுந் தாம் ஆற்றிய இறைவழிபாட்டு முடிவின்கண் இறைவனார் திருச்சிலம் பொலி கேட்டுவந்த துண்டாயின் அப்பெருஞ் சிறப்பினைப், பெரிய புராணத்திற்கு முற்பட்டு அதற்கு முதல் நூலாய் விளங்கிய 'நம்பி யாண்டார் நம்பி திருவந்தாதி' கூறியிருத்தல் வேண்டும்; மற்று அதைப்பற்றிய குறிப்பினை அது சிறியதாயினுங் கூறக்கண்டிலம். அற்றன்று. சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த 'திருத் தொண்டத் தொகைக்கு வகையாக நம்பியாண்டார் நம்பி 'திருத் தொண்டர் திருவந்தாதி' இயற்றியருளினாராகலிற், சுருக்க நூலாகிய அதன்கண் அது கூறப்படாமைபற்றி இழுக்கில்லை; அந் நூலின் விரிவாக இயற்றப்பட்ட 'பெரிய புராணத்'தின்கண் அவ் வரலாறு காணப்படுதலே மரபாமாலெனின் ‘திருவந்தாதி’ சுருக்க நூலாயினும், வழிபாட்டு முடிவின்கண் இறைவன் காற்சிலம் பொலியினைக் கேட்டலாகிய பெருஞ்சிறப்புச் சேரமான் பெருமாள் நாயனாருக்கு வாய்த்திருந்ததாயின் அதனைக் கூறாது விடாது; என்னை? சுருக்க நூல்களெல்லாம்

ன்றியமையாச் சிறப்புக்களைக் கூறுதலும், அங்ஙனமல்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/258&oldid=1587705" இலிருந்து மீள்விக்கப்பட்டது