உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

253

மேலே, திருவாசகத்தின் திருவண்டப்பகுதியி லிருந்தெடுத்த பாட்டின் பகுதியையும், பழைய சங்கச் செய்யுளாகிய ‘முல்லைப் பாட்டி'லிருந்தெடுத்த பகுதியையும் ஒப்பிட்டுக் காண்புழி. அவை சொல்நோக்கு சொற்பொருள் நோக்குகளிற் பெரும்பாலும் ஒற்றுமைகொண்டு நிற்றலும் வடசொற் கலப்பில்மட்டுஞ் சிறுபான்மை வேற்றுமையுற்று நிற்றலுந் தெற்றென விளங்கா நிற்கும். எனவே, பழைய செந்தமிழ் வழக்கே மிக முனைத்து நிற்க. அதன்கண் வடமொழி வழக்குச் சிறிது புகுந்த காலத்திலேதான் 'திருவாசகம்' இயற்றப்பட்ட தென்பதூஉம். அது தமிழோடு வடமொழி வழக்கையுஞ் சிறிது தழுவியதா மென்பதூஉம் பெறப்படும்.

இனித், திருவாசகத்தின் முதல் நான்கு பாட்டுக்கள் பழந்தமிழ்ப் பாவால் ஆக்கப்பட்டிருப்ப, அந் நான்கின்பிற் புதிது புகுந்த கட்டளைக் ‘கலித்துறை' யால் ஆக்கப்பட்ட பத்துச் செய்யுட்களும் அவற்றின்பிற் பழைய 'தரவு கொச்சகக் கலிப்பாவால் ஆக்கப்பட்ட பத்துச் செய்யுட்களுங் காணப்படு கின்றன. இவைகளின்பின் அறுபது விருத்தப்பாக்கள் காணப்படுகின்றன எ.' இவற்றின்பிற் கலிப்பாவிலிருந்து தோன்றிய 'கலிநிலைத்துறை'யிற் பத்துச் செய்யுட்கள் இருக்கின்றன. இங்ஙனமே இடையிடையே விருத்தப் பாக்களும், கட்டளைக் கலித்துறைகளுமாகிய புதிய பாவினங்களோடு, பண்டைச் செந்தமிழ்ப் பாக்களாகிய ‘தரவு கொச்சகக்கலிப்பா’, கலித்தாழிசை முதலியனவும் விராய்க்கிடக்கின்றன. தொடக்கத்திலுள்ள நான்கு நீண்ட பாட்டுக்களையும் நந்நான்கடியாகப் பகுத்தலால், அவை நூற்றறுபத்திரண்டு செய்யுட்களுக்கு ஒப்பாகும். இவையல்லாத ஏனை விருத்தப் பாக்கள் முந்நூற்றிருபத்தாறு 'கட்டளைக் கலித்துறை' புதிய பாவேயாயினும், வெண்பாவிற்குரிய ‘இயற்சீர் வெண்டளை' 'வெண்சீர் வெண்டளை'களும், கலிப்பாவிற்குரிய 'துள்ள லோசை’யும் பெற்றுவருதலின் அவை தமிழ்ப் பாக்களோடு சேர்த்து எண்ணப்பட்டன. கலிநிலைத்துறை'யும் கலிப் பாவினோசைபற்றி அவ்வாறு அவற்றோடு சேர்க்கப் பட்டன ‘கலித்தாழிசை' பழைய தமிழ்ப்பாவே யல்லது புதிது புகுந்தது அன்று. இஃது இவ்வாறாகவும் ‘தமிழ் வரலாறு' எழுதினவர், சங்ககாலத்துச் சான்றோர் செய்யுட்களில் ‘தாழிசை’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/286&oldid=1587733" இலிருந்து மீள்விக்கப்பட்டது