உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மறைமலையம் 22

இல்லையெனப் பிழைபடக் கூறினர். கலித்தொகை என்னுஞ் நூலில் ‘தாழிசை’ வருதலை இவர் உணர்ந்திலர். அதுவேயு மன்றிக் கடைச்சங்க இலக்கியங்கட்கு முற்பட்டதாகிய தொல்காப்பியம் செய்யுளியலில் வண்ணகவொத்தாழிசைக்கு இலக்கணங்கூறும்,

“வண்ணகந் தானே,

தரவே தாழிசை யெண்ணே வாரமென்

றந்நால் வகையிற் றோன்று மென்ப.

என்னுஞ் சூத்திரத்தையும்,

“ஒத்து மூன்றாகும் ஒத்தா ழிசையே’

”2

என்னும் ஒத்தாழிசை

லக்கணச்

சூத்திரத்தையும்,

கொச்சகவொரு போகு இலக்கணங்கூறும்,

66

'தரவின் றாகித் தாழிசை பெற்றும்”3 என்னுஞ் சூத்திரத் தையும் அறிந்திருந்தனராயின் இங்ஙனம் வழுப்படவுரையார் செந்தமிழ் மொழீக்கு ஒரு நந்தாமணி விளக்காய்த் திகழும் தொல்காப்பியம் செவ்வனே அறியாதார் தாமும் தமிழ் வரலாறு எழுதப் புகுதல் இரங்கற்பால தொன்றாம். அதுநிற்க. இனி, முதல்நின்ற நான்கு நீண்ட பாட்டுக்களும் நூற்றறுபத் திரண்டு செய்யுட்களுக்கு ஈடாய் நிற்றலால், இவற்றோடு வெண்பா கலிப்பா கலித்துறை முதலியவற்றைக் கூட்டத் தமிழ்ப்பாக்கள் நானூற்றெண்பத்தெட்டும், முற்றும் புதியவாய விருத்தப்பாக்கள் முந்நூற்று முப்பதும், ஆக எண்ணூற்றுப் பதினெட்டுச் செய்யுட்கள் திருவாசகத்தின்கண் உள்ளன; வை தம்முள் ஒன்றரைப் பங்கு செந்தமிழ்ப்பாக்களும், ஒருபங்கு புதிய விருத்தபாக்களுமாக இந் நூலின்கண் விரவிக்கிடத்தல் தமிழுணர்ந்தார்க்குச் செவ்விதிற் புலனாம்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட செந்தமிழ் நூல்க ளெல்லாம் பண்டைத் தமிழ்ப் தமிழ்ப் பாக்களாலும் பாவினங்களாலுமே ஆக்கப்பட்டிருப்பக் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தமிழ் நூல்களெல்லாம் புதிது புகுந்த விருத்தப்பாக்களாலேயே ஆக்கப்பட்டிருப்பத்,

'திருவாசகமோ' ஒன்றரைப்பங்கு பண்டைத் தமிழ்ப்பா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/287&oldid=1587734" இலிருந்து மீள்விக்கப்பட்டது