உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

255

பாவினங்களாலும், ஒருபங்கு புதிது தோன்றிய விருத்தப் பாக்களாலும் ஆக்கப்பட்டிருத்தலை நுனித்துக் காண வல்லார்க்குப், பண்டைத்தமிழ் வழக்குச் சிறிது சிறிது வீழ்ந்து, புதிய கலவை வழக்கு மெல்லமெல்லத் தோன்றும் ஒரு காலத்தே திருவாசக நூல் இயற்றப்பட்டதாதல் நன்கு விளங்கும். இத் திருவாசகத்தைப்போற் பழைய வழக்கும் புதிய வழக்கும் ஒருங்கு விரவிய பிறிதொரு தமிழ்நூலைக் காண்டல் அரிது. அங்ஙனம் விரவிய வழக்கினுள்ளும் பழைய வழக்கையே அது பெரிதுஞ் சார்ந்து நிற்கக் காண்டலிற் புதிய வழக்குக்குத் தோற்றவாய் காட்டும் 'சிலப்பதிகாரத்'தின் காலத்தை நெருங்க அடுத்தே திருவாசகம்’, திருக்கோவையார்’ என்னும் நூல்கள் தோன்றியவாதல் தெளியப்படும். அற்றேல், ‘நந்திக் கலம்பகம்', 'காசிக் கலம்பகம்' முதலிய பிற்காலத்து நூல்களுள்ளும் பழையவும் புதியவுமாய எல்லாத் தமிழ்ப் பாவினங்களுள் கலந்து காணப்படுதல் என்னை யெனின்; அவையும், 'மும்மணிக் கோவை’, ‘நான்மணிமாலை' போல்வனவுமெல்லாம் தமிழ்ப்பா பாவினங்களைக் காட்டுதற் பொருட்டுப் புலவர்களாற் செயற்கையாகச் செய்யப் பட்டனவே யல்லாமல், அவ்வக்கால வழக்கொடு பொருந்தி இயற்கையாக இயற்றப்பட்ட ‘திருவாசகம்’ ‘திருக்கோவையா’ரைப் போல்வன அல்லவாம். பட்டினத்தடிகள் அருளிச்செய்த 'கோயில் நான்மணிமாலை', ‘திருக்கழுமல மும்மணிக்கோவை’ முதலியனவும் அன்பினாற் பாடப்பட்டனவேனும், அவை, வெண்பா கலித்துறை விருத்தம் அகவல் என்னும் நால்வகைப் பாவானும், அகவல் வெண்பா கலித்துறை என்னும் மூவகைப் பாவானுமே முறையே ஆக்கப்படுதல் வேண்டுமென்னும் செயற்கை முறைபற்றி வந்தவாறு போலல்லாமல் திருவாசகத்தின்கட் பழையவும் புதியவுமாகிய பாக்கள் பலவும் கால இயற்கையின் வழியே ஒருங்கு விராய்க் கிடத்தல் உற்று நோக்கற் பாலதாம். அதுகிடக்க.

னிக், ‘கல்லாடமோ' திருவாசகத்திற்குப் பின்னெழுந்த நூலாயினும், பண்டைத் தமிழ் வழக்கு முழுதும் வீழ்ந் தொழியாத காலத்ததாகலின், பழைய தமிழ்ப் பாவாகிய அகவலினாலேயே அது முற்றும் யாக்கப்படுவதாயிற்று. மாணிக்கவாசகப் பெருமான் அருளிய ‘திருச்சிற்றம்பலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/288&oldid=1587735" இலிருந்து மீள்விக்கப்பட்டது