உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

❖ LDM MLDMOED - 22❖ மறைமலையம்

கோவையார்' பழைய அகப்பொருள் வழக்கையே தழுவி இயற்றப்பட்டதாயினும், பழைய தமிழ்நூல்களிற் காணப்படாத ‘கட்டளைக் கலித்துறை' என்னும் புதியதொரு யாப்பினால் இயற்றப்பட்டிருத்தலின் இது கொள்ளற் பாலதாமோ என அதன்மேற் குற்றங்கூறக் கருதினார் ஒரு புலவர்க்கு. அவர்கொண்ட கருத்தினை மாற்றுதற்பொருட்டுக் கல்லாடனார் என்னும் நல்லிசைப் புலவர் அத் திருக் கோவையார் நானூறு செய்யுட்களில் ஒரு நூறுசெய்யுட்களை யெடுத்து, அவற்றின்கட்சொல்லப்பட்ட அகப்பொருள்களைப் பண்டையோர் பாடியபடியாகவே தமது காலத்தும் வீழாது வ வழங்கிய அகவற் பாவாற் பாடிக்காட்டினாரென ஆன்றோர் கூறும் இக்கதை எவ்வாறாயினும், கல்லாடநூல் பழைய தமிழ்வழக்கு முற்றும் வீழ்ந்து போகாத ஒரு காலத்தே இயற்றப்பட்டதாதலும். ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டுத் தோன்றிய நூல்களில் ஏதும் கல்லாடத்தைப் பிற்பட்டுத் தோன்றியநூல்களில் ஏதும் கல்லாடத்தைப்போல் முழுவதும் அகவற் பாவினாற் அகப்பொருண்மேற் செய்யப்படாமையே இதற்கொரு பெருஞ் சான்றாதலும் தெளியவல்லார்க்கு இக்கதை முற்றும் பொய்யாகாமை புலனாம். அற்றேல், ஞானாமிர்தம்’, சங்கற்பநிராகரணம்', என்னும் நூல் களிரண்டும் முற்றும் அகவற் பாவால் யாக்கப்பட்டிருத்தல் என்னையெனின்; அவையிரண்டுஞ் சமயப்பொருள் பற்றி இயற்றப்பட்டனவே யல்லாமற், 'கல்லாடம்' போற் பழைய தமிழ்ப்பொருண்மேல் இயற்றப்படாமையானும், கல்லாடத்தைப் பார்க்கினும் இவ்விரண்டினும் வடசொற்களும் சொற்றொடர் களும் மிகுதியாய்க் கலந்திருத்தலானும், பழைய செந்தமிழ்ச் சாற் பொருணயங்கள் கல்லாடத்திற் காணப்படுதல்போல் இவ்விரு நூல்களினுங் காணப்படாமையானும், கல்லாடத்தில் அகவற் பாவின் அமைப்புப் பழைய அகவற்பாவினமைப்பை யொத்திருக்க மற்று இவ்விரு நூல்களிலுள்ள அப்பாவின் அமைப்புப் பெரிதும் வேறுபட்டுப் புதிய முறைபற்றி வந்திருக்கலானும். இவை, பழந்தமிழ் வழக்கே பற்றிவந்த கல்லாடத்தைச் சிறிதும் ஒவ்வாமற் புதுத் தமிழ் வழக்கின் கட்படுவனவா மென்றே துணியப்படும். இவ்வுண்மை, இம் மூன்று நூல்களினும் உள்ள செய்யுட்கள் சிலவற்றைச் சங்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/289&oldid=1587736" இலிருந்து மீள்விக்கப்பட்டது