உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1

செய்யுட்களோடு

ஒப்பிட்டு நோக்குதலால்

257

இனிது

விளங்குமாதலிற், சுருக்கத்தின்பொருட்டு முதலிற் குறுந்தொகை

யிலிருந்து ஒரு செய்யுளை இங்கெடுத்துக் காட்டுதும்:

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ,

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோநீ அறியும் பூவே

”4

இதனோடு, இப்பொருளே பற்றிவந்த,

66

"அருடருங் கேள்வி அமையத் தேக்கப் பற்பல ஆசான் பாங்கு செல் பவர் போல் மூன்றுவகை பத்த தேன்றரு கொழுமலர் கொழுதிப் பாடுங் குணச்சுரும் பினங்காள்! உளத்துவே றடக்கி முகமன் கூறாது வேட்கையின் நீயிர்வீழ் நாட்பூ வினத்துட் காருடற் பிறையெயிற் றரக்கனைக் கொன்று வச்சிரத் தடக்கை வரைப்பகை சுமந்த பழவுடற் காட்டுந் தீராப் பெரும்பழி பனிமலை பயந்த மாதுடன் தீர்த்தருள்

பெம்மான் வாழும் பெருநகர்க் கூடல் ஒப்புறு பொற்றொடிச் சிற்றிடை மடந்தைதன் கொலையின ருள்ளருங் குறைகொள இருண்டு நான நீவி நாண்மலர் மிலைந்து

கூடி யுண்ணுங் குணத்தினர் கிளைபோல்

நீடிச் செறிந்து நெய்த்துடல் குளிர்ந்த

கருங் குழற் பெருமணம்போல

ஒருங்கு முண்டோ பேசுவி ரெமக்கே.”5

என்னுங் கல்லாடச் செய்யுளையும், இதனோடு,

“காரியங் காசினி யாதி ஏரியல்

ஈசன் கத்தா இவற்கிது போகம்

ஆதல் செல்லா தகன்றுயர் கருமந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/290&oldid=1587737" இலிருந்து மீள்விக்கப்பட்டது