உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மறைமலையம் 22

தானோ நுகர்தல் செல்லா தானா

தென்னை செய்த தென்னின் அனனோ கொன்னே செய்யான் தன்னேர் இல்லோன் பாரிசேட மதனிற் பரனுக்

கோரியல் பரன்பசு என்றறி இனிதே

996

என்னும் ஞானாமிர்தச் செய்யுளையும். அதனோடு,

“உரைதரு பிரமம் ஒன்றெனும் உரைக்கண் வருபிர மாணம் மறையெனில் அருமறை ஒன்றென்ற தன்றி இருபொரு ளுரைத்தல் நன்றன் றபேத நாடிய பொருளேற் பேதமும் அபேதமும் ஓதல் வேண்டா, பேத மெனினும் அபேத மெனினும் பேதா பேத மெனினும் அமையுநின் ஐயமில் உரையிற் பையவந் துளதாந் திகழ்பிர மாண இகழ்வும்உண் டன்றிப் பெத்தம பேதம் முத்தி அபேதமேல்

அவநத் திதமாம் அவையிரு திறனும்.'

7

என்றற் றொடக்கத்துச் சங்கற்பநிராகரணச் செய்யுளையும் ஒப்பிட்டு நோக்குக.இந்நான்கு செய்யுட்களிலுங் குறுந் தொகைச் செய்யுளுங் கல்லாடச் செய்யுளுஞ் செந்தமிழ்ச் சொற்பொருள் வழக்கிற் பெரும்பான்மை யொத்துச் சிறு பான்மை வேறுபட்டு நிற்றலும், ஏனை ஞானாமிர்தச் செய்யுளுஞ் சங்கற்பநிராகரணச் செய்யுளும் அவ் விரண்டோடு சிறுபான்மை யொத்துப் பெரும் பான்மை வேறுபட்டு நிற்றலுந் தெற்றென விளங்காநிற்கும். ங்ஙனமாயினும், 'ஞானாமிர்த’ச் செய்யுட்களிற் பெரும் பாலன சமயப்பொருள் பெரிது நுதலா இடங்களிற் பழைய சங்கத்தமிழ்ச் சொற் பொருணயங்கள் செறிந்து மிளிரக் காண்டலின், அது கல்லாட காலத்தை யடுத்துச் சிவாகம ஞானபாதக் குறியீடுகள் தமிழின்கண் விரவத்தொடங்கிய காலத்தே. அஃதாவது, ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டதோர் அரிய நூலாதல் தெளியப்படும். திருமூல நாயனார் அருளிச்செய்த ‘திருமந்திரம்' என்னும் சைவ சித்தாந்தத் தனிப்பெரு ஞான நூலும் இவ்வாறாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/291&oldid=1587742" இலிருந்து மீள்விக்கப்பட்டது