உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

259

நூற்றாண்டின் இடையே, ‘ஞானாமிர்தத்’திற்குச் சிறிது முன்னே தோன்றிய தொன்றாகும்; இதன் வரலாற்றினைப் பின்னே விளக்குதும். மற்றுச் ‘சங்கற்பநிராகரணமோ,'

“ஏழஞ் சிருநூ றெடுத்த ஆயிரம்

வாழுநற் சகனம் மருவா நிற்ப.”

என்று அதன் பாயிரங் கூறுமாற்றால் இற்றைக்கு அறுநூற்றுப் பதினோராண்டுகளுக்குமுன் இயற்றப்பட்டமை நன்கு

பெறப்படும்.8

அற்றேல், 'மணிமேகல’ என்னுந் தமிழ்ப்பெருங் காப்பியத்திற் ‘சமணக்கணக்கர் தந்திறங் கேட்ட காதை’யிலும், 'பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை'யிலும் வட வ சொற்களுஞ் சொற்றொடர்களும் நிரம்பியிருத்தல் காணப் படுதலின், அதுபற்றி அந்நூலையும் ஆறாம் நூற்றாண்டின்கட் பட்டதென்றுரைத்தல் அமையாது. 'மணிமேகலை'யில் எவ்வகையான வடசொற்கள் கலந்தன? 'திருமந்திரம்’, 'ஞானாமிர்தம்' என்பவற்றில் எவ்வகையான வடசொற்கள் கலந்தன? என்று ஆராய்ந்து பார்த்துப் பின்னர் ஒரு முடிபுக்கு வருதல் வேண்டும். மணிமேகலையுட் கலந்த வடசொற்கள் புத்த மதத் தொடர்புடையனவாகும். புத்தமதம் வடமொழி மிக்கு வழங்கிய வடநாட்டிற் பிறந்து பின்னர் இத் தென்றமிழ் நாட்டிற் புகுந்தமையால், அம் மதத்தோடு தொடர்புடைய சொற்களுஞ் சொற்றொடர்களுமே அப் புத்த சமயப் பொருள் நுதலும் மணிமேகலையின் அவ்விரு காதைகளிலும் மிகுந்து காணப்படுகின்றன. இவ்வளவே யல்லாமற் சைவசமயத் தொடர்புடைய வடசொற்கள் சொற்றொடர்கள் அதன்கட் காணப்படுகின்றில. இனிப் புத்த மதம் மூன்றாம் நூற்றாண்டின் ஈற்றிலிருந்து தன்னொளி மழுங்கி யொடுங்கிப் போக, அதற்குப்பின் சமண சமயந் தலை நிமிர்ந்துலவ லாயிற்று. இதுவும் வடநாட்டிலிருந்தே வந்ததொன் றாகையால் நான்காம் நூற்றாண்டுமுதல் இதனோடு தொடர்புடைய சொற்களுஞ் சொற்றொடர்களுந் தமிழில் வந்து கலப்பவாயின. இங்ஙனம் வந்த சமணமதக் குறியீடுகளைப் பெருங்கதை, சூளாமணி, சிந்தாமணி முதலிய நூல்களுட் காண்க. இனி, ஆறாம் நூற்றாண்டிலிருந்து சைவ சமயமானது சமணமதத்தோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/292&oldid=1587751" இலிருந்து மீள்விக்கப்பட்டது