உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மறைமலையம் 22

போராடவேண்டி வந்தமையால், அச் சமணமதச் சொற்கள் குறியீடுகளையுந் தானெடுத்து வழங்கியதோடு. அக்காலத்தே வடநாட்டிலிருந்து போந்து தமிழ்நாட்டிற் குடியேறிய சைவசமயக் குருக்கண்மார் வழங்கிய சைவசமயக் குறியீடுகள் சொற்கள் கொள்கைகள் முதலிய வற்றையுந் தான் தழுவி வழங்கலாயிற்று.

இக் காலம்முதல் எழுந்த திருமந்திரம், ஞானாமிர்தம், மூவர்தேவாராம், பெரியபுராணம், சிவஞானபோதம், சிவஞான சித்தியார் முதலான சைவசமய நூல்களிலெல்லாங் காணப்படும் வடசொற்களும் குறியீடுகளும் இம்முறையால் வந்து வழங்கினவேயாம். மற்று, இச் சமணமத புத்தமத காலங்களுக்கு முற்பட்ட நாட்களிலோ இத் தென்றமிழ் நாட்டிற் சைவசமயக் கொள்கைகளே ஏனையெல்லாவற்றினும் மேம்பட்டு விளங்கின வென்பதற்கு, 'மணிமேகலை’, 'சிலப்பதிகாரம்’, ‘மதுரைக் காஞ்சி', 'புறநானூறு' முதலிய வற்றின்கண் முக்கட்பிரானாகிய சிவபெருமானே முழுமுதற் கடவுளாக ஏனை யெல்லாக்கடவு ளர்க்கும் முன்வைத்துரைக்கப் படுதலே சான்றாம். ஆனாற், பண்டைத் தமிழர் கைக் கொண்டொழுகிய சைவக் கொள்கைகள் எல்லார்க்கும் பொதுவாவனவாய் நாடோறும் வழக்கத்திலுள்ள தனித் தமிழ்ச் சொற்களால் ஆக்கப்பட்டு எல்லாரானும் எளிதில் உணரக் கிடந்தன; அதனால், அவை இன்னார்க்குத்தாம் உரியவை இன்னார்க்கு உரியவல்ல என்று பிரித்துக் காணப்படாமல் எல்லார்க்கும் பொதுவாய் இருந்தன.

9

முக்கண்ணன், கடவுள், பிறவா யாக்கைப்பெரியோன், மன்னுயிர், பல்லுயிர், மனமாக, ஊழ், வினை, அறம், மறம், இன்பதுன்பம், ஒளியுலகம், இருளுலகம், நிலையாயாக்கை, லையாவுலகம், இல்லறம், துறவறம், அன்பு, அருள், சுட்டு, வீடு, சுட்டு,வீடு, பிரிவில் நிலை, இரண்டறக் கலத்தல், திருவடித் தொண்டு கோயில் வழிபாடு, முதலான தனித்தமிழ்ச் சொற்களையும் அச்சொற்களாற் றொடுத்த கொள்கைகளையும் வழங்கிய வரையில் இவை இன்னமத மென்று எவர்க்குந் தெரியாவா யிருந்தன; எல்லாரும் அவற்றை நாடோறும் கைக்கொண் L ாழுகுதலால் அவற்றை அவர் வேறாக நினைத்தலுஞ் செய்திலர். மற்று, இவைதம்மையே புதிது வந்த வடசொற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/293&oldid=1587759" இலிருந்து மீள்விக்கப்பட்டது