உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1

261

களால் வழங்கப்புகுந்த அளவானே எல்லா மதப் பிரிவுகளும், மதப்போராட்டங்களுங் கிளைக்கத் தலைப்பட்டுத் தமிழ்மக்களை எண்ணிறந்த பிரிவுகளாகப் பிரித்து ஒற்றுமை குலைத்து, அவர்களைப் பெருந் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டன. அவரவர் தத்தங் கொள்கைகளை உயர்த்துதற் பொருட்டு மிக அருவருக்கத்தக்க பொய்க்கதைகளை, எல்லார்க்குந் தெரியாத வடமொழியில் எளிதாக வரைந்து வைத்துச் சாதிச் சண்டை சமயச் சண்டைகளை இத் தமிழ்நாடெங்குங் கிளப்பிவிட்டனர். இத்தகைய பிரிவுகளும் மதவேற்றுமைகளும் பொய்க் கதைகளும் பழைய தனித்தமிழ் நூல்களிற் காணப்படாமை கற்றறிவுடையார் பெரிதுங் கருத்திற் பதிக்கற்பாலர்.

துலங்குகின்றது.

பழைய தனித்தமிழில் இயற்றப்பட்டிருப்பதனாலேயே திருக்குறள் என்னும் அரியபெரிய நூல் எல்லாச் சாதியினர்க்கும் எல்லாச் சமயத்தினர்க்கும் பொதுவாய். எல்லாரானும் பொன்னே போற் போற்றித் தழுவப்படும் ஒப்புயர்வற்ற நூலாய்த் துலங்குகின்றது. இவ்வொருநூலை மட்டும் எல்லாருங் கருத்தாய்க் கற்று அதன்படி ஒழுகுவாராயின், அவர் எல்லாரும் பேரறிஞராய் மனஞ்சொற்செயல்கள் தூயராய் அன்பினாலும் அருளினாலும் அளவளாவி, ஒருவருக்கொருவர் பயன்பட்டு, முடிவில் இறைவன் றிருவடிப் பேற்றினையும் எய்தி ஈறிலா இன்பத்தில் வைகுவர். ஆனால், அத்தகைய தனித்தமிழ் மாட்சி திரும்பவும் முன்போல் ஒளியுடன் விளங்கிப் பயன்படுநாள் எந்நாளோ அறிகிலம்! இருந்த வாற்றால், தனித் தமிழ் வழங்கிய காலந்தொட்டு, அதற்குப் பின் ஒன்றன்பின் ஒன்றாய்வந்த காலவேறுபாடுகளை அவ்வக்காலங்களிற் பிறந்த நூல்களிற் காணப்படும் அடையாளங்களைக் கொண்டு இனிது தெளியப் பெறுகின்றேம்.

நிலநூலார்" நிலத்தினைத் துருவி அதன் கீழுள்ள பற்பல படைகளையும். அவ்வப் படைகளிற் புதைந்துகிடக்கும் பற்பல பொருள்களையும் ஆராய்ந்துபார்த்து. அவ்வப்படைகள் உண்டான காலத்தையும், அவற்றில் உலவிய உயிர்கள். அவ்வுயிர்கள் வழங்கிய பண்டங்கள், அப்பண்டங்களிலிருந்த மரஞ்செடி கொடிகள் முதலியவற்றையுமெல்லாம் வழுவாமல் விளக்கிக் காட்டுதல்போலத் தமிழ் நூலாராய்ச்சி செய்வோரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/294&oldid=1587767" இலிருந்து மீள்விக்கப்பட்டது