உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

  • மறைமலையம் - 22

தனித்தமிழ் உண்டானது முதல் துவரையிற் போந்த காலத்தையுந் துருவிப்பார்ப்பாராயின், அது பலபடைகளாய்ப் பிரிந்திருக்கவும், அப்படைகளிற் புதைந்துகிடக்குந் தமிழ் நூல்கள் அவ்வக்காலப் படையின் இயல்பையும், அஞ்ஞான்று உலவிய மக்களியல்பையும் தெற்றெனக் காட்டவுங் காண்பார்கள்.

எமதாராய்ச்சிக்கு விளங்கிய அளவு, அக்காலத்தைத் தனித்தமிழ்க்காலம், புத்தகாலம், சமணகாலம், சைவ வைணவ காலம், பார்ப்பனகாலம், ஆங்கிலகாலம் என ஆறு கூறாக வகுக்கின்றேம்.பாரதப்போர்" நிகழ்ந்தபோது உடனிருந்த முதஞ்சியூர் முடிநாகராயர் காலந்தொட்டுக் கி.பி. முதல்

நூற்றாண்டுவரையிற் சென்றகாலத்தைத் தனித்தமிழ்க் காலமெனவும், கி.பி. முதல்நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டுவரையிற் சென்ற காலத்தைப் புத்தகாலமெனவும், நான்காம் நூற்றாண்டுமுதல் ஏழாம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைச் சமண காலமெனவும், ஏழாம் நூற்றாண்டு முதற் பதினான்காம் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தைச் சைவ வைணவகால மெனவும், பதினான்காம் நூற்றாண்டுமுதற் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிற் சென்றகாலத்தைப் பார்ப்பன காலமெனவும், பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் இதுகாறுஞ் சென்ற காலத்தை ஆங்கிலகாலமெனவுங் கூறுதல் இழுக்காமை. இவ் வறுவகைக் காலங்களிற் றோன்றிய நூல்களை நன்காராயும் முகத்தாற் றெளியலாம். இவற்றுட் புத்தகாலத்துத் தோன்றிய சமயநூல்களில் அப் புத்தசமயச் சொற்கள், குறியீடுகள், கொள்கைகளே முனைந்துநிற்கக் காண்டுமல்லது. ஏனைச் சமண சைவச்சொற்கள் குறியீடுகள் கொள்கைகள் முனைத்துநிற்கக் காணாமையின், அக்காலத்துப் பிறந்த 'மணிமேகலை’யை அதில் வடசொற்கள் காணப்படும் அவ்வளவே பற்றிச் சமண காலத்தின்கட் படுவதாகிய ஆறாம் நூற்றாண்டிற் சேர்த்தல் ஒருவாற்றானும் ஒவ்வாது.

L

அற்றேற், சைவ வைணவ காலத்திற் சேர்க்கற் பாலனவாகிய ‘திருவாசகம்’, ‘திருமந்திரம்’, ‘ஞானாமிர்தம்’ முதலியனவற்றைப் புத்தகால சமணகாலங்களிற் சேர்த்த தென்னையென்றாற், சைவ வைணவ சமயங்கள் புதிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/295&oldid=1587776" இலிருந்து மீள்விக்கப்பட்டது