உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

――

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1

263

தோன்றியனவல்ல; அவை தமிழ் மக்கட்கே முற்றும் உரியனவாய்த் தனித்தமிழ்க்காலந் தொட்டு இற்றைநாள் வரையும் அவியாது பொலிவனவேயாயினும், இடையிடையே புகுந்த புத்தசமணப் பெருங்காற்றுகளால் அலைப் புண்டு. பின்னர் அவ்வக்காலங்களிற் றோன்றிய மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் முதலான அருட்டிருவாளரால் வகுக்கப் பட்ட அருளரண்களுள் நிலைபெற்றுச் சுடர்ந்து ஒளிர்கின்றன. அவ்வக்கால வகுப்புகளில் முனைத்துக் கிளர்ச்சியாய் நின்ற கொள்கைகள் பற்றிப் புத்தகாலம் சமணகாலம் என்றதல்லது. அக் காலங்களிற் சைவ வைணவங்கள் இருந்திலவென்பது கருத்தன்று. எல்லாக்கால வகுப்புகளினூடும் இவ்விரு சமயங்களும் நிலைபெற்று வருதல் நுனித்தறிவார்க்கு விளங்கா திராது. அல்லதூஉம், அவ்வக் காலத்துப் புகுந்த வட சொல்லாராய்ச்சி யானும், பிறசான்றுகளானும், 'திருவாசகம்', 'திருமந்திரம்’, 'கல்லாடம்' முதலிய நூல்கள் புத்தசமண காலங்களிற் பிறந்தன என்றாம்.

அடிக்குறிப்புகள்

1.

தொல்காப்பியம், செய்யுளியல். 140.

2.

தொல்காப்பியம், செய்யுளியல், 142.

4.

ல் ற் ம் ம் No

6.

7.

8.

9.

10.

11.

தொல்காப்பியம், செய்யுளியல், 149.

குறுந்தொகை, 2.

கல்லாடம், 37.

ஞானாமிர்தம், 5.

மாயாவாதி சங்கற்ப நிராகரணம்

See also Dr. G.U. Pope's English Translation of the Tiruvachakam, Notes. P. LXXV.

See for an impartial of this subject in Dr. S. Krishnaswami Aiyanagar's recent work: 'Some Contributions of South India to Indian Culture' pp. 54-56 and 215-216

Geologists

பாரதப் போர் கி.மு.மூவாயிரத்தில் நிகழ்ந்ததென்று ஒருசாராரும் கி.மு. ஆயிரத்தில் நிகழ்ந்ததென்று மற்றொரு சாராரும் வழக்காடா நிற்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/296&oldid=1587786" இலிருந்து மீள்விக்கப்பட்டது