உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

6. திருக்கோவையாரின் செய்யுட்பொருள் பழந்தமிழ் நூல்களோடு ஒத்தல்

இனித், 'தேவாரத்'தில் விருத்தங்கள் மட்டும் உள்ளன. திருவாசகந் திருக்கோவை’யாரில் அவ்விருத்தங்களோடு துறைகளும் உள்ளன; வரவரப் பாவினங்கள் பெருகுதல் இயல்பாதலால். அங்ஙனம் அவை பெருகிய காலத்திலேதான் திருவாசகந் திருக்கோவையார் என்பன இயற்றப்பட்டவாதல் வேண்டுமென எதிர்ப்பக்கத்தவர் கூறினாராலெனின்; அவர் தேவாரப் பாக்களின் இலக்கணம் ஆராயாது விளம்பி னமையின் அவருரை கொள்ளற்பாற்றன்று. திருவாசகந் திருக்கோவை யாரில் உள்ள 'கட்டளைக் கலித்துறைப் பாக்கள் போல்வன எத்தனையோ தேவாரத்தின்கண் உள்ளன. முதலில், மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த 'திருக்கோவை யாரிலிருந்து ஒரு கட்டளைக் கலித்துறைச் செய்யுளை ஈண்டெடுத்துக் காட்டுகின்றாம்’

66

‘அணியும் அமிழ்தும்என் ஆவியும் ஆயவன் தில்லைச்சிந்தா மணியும்ப ரார்அறி யாமறை யோனடி வாழ்த்தலரிற் பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும்

பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே.'

وو

இது முதலில் 'அணி' என்னும் நிரையசையால் தாடங்கி யிருத்தலின் ஒவ்வோரடியிலும் ஒற்றுத் தள்ளிப் பதினேழுெழுத் திருக்கின்றன; ஒவ்வோரடியும் ஐந்துசீர்களை உடைத்தாய் இயற்சீர் வெண்டனையும் வெண்சீர் வெண்டளையும் பிழை படாமல் வந்திருக்கின்றன. நேரசையை முதலாகவுடைய செய்யுளாயின் ஒவ்வோரடியிலும் ஒற்றுத் தள்ளிப் பதினா றெழுத்தே இருத்தல்வேண்டும்; இதுவே 'கட்டளைக் கலித்துறைக்’கு இலக்கணமாதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/297&oldid=1587795" இலிருந்து மீள்விக்கப்பட்டது